Home
Mobile

கிடைச்ச கேப்புல.. இன்னொரு கிடா வெட்டிய இந்திய நிறுவனம்.. சீன கம்பெனிகள் கலக்கம்? உண்மையான 5G ஆட்டம் ஆரம்பம்!

இந்திய மொபைல் சந்தையை சீன மொபைல் நிறுவனங்கள் தான் ஆட்சி செய்கின்றன. பட்ஜெட் (Budget) பிரிவு முதல் பிளாக்ஷிப் (Flagship) பிரிவு வரையிலாக சீன பிராண்டுகளின் மொபைல் போன்கள் தான் கஸ்டமர்கள் ஆர்வத்தை தூண்டும் விலை மற்றும் அம்சங்களுடன் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இதற்கிடையில், இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா (Lava) சீன நிறுவனங்களை கலக்கம் அடைய செய்யும் வேலையொன்றை செய்துள்ளது. தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ஒரு சில தினங்களில், 5ஜி ஆதரவுடன் (5G Support) இன்னொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

கிடைச்ச கேப்புல.. இன்னொரு கிடா வெட்டிய இந்திய நிறுவனம்!

அதென்ன மாடல்? அது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? லேட்டஸ்ட் ஆக அறிமுகமான லாவா போனின் மாடல் பெயர் என்ன? அதன் விலை மற்றும் அம்சங்கள் என்ன? லாவாவின் இந்த பேக்-டூ-பேக் அறிமுகம் சீன நிறுவனங்களுக்கு சிக்கலாக மாறுமா? இதோ விவரங்கள்:

கடந்த டிசம்பர் 14 ஆம் தேதியன்று, லாவாவின் லேட்டஸ்ட் பட்ஜெட்-விலை மாடலாக லாவா யுவா 3 ப்ரோ (Lava Yuva 3 Pro) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. யுனிசாக் டி616 சிப்செட், 50எம்பி மெயின் கேமரா, எச்டி+ டிஸ்பிளே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி, ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இது வெறும் ரூ.8999-க்கு வெளியாகியுள்ளது.

கிடைச்ச கேப்புல.. இன்னொரு கிடா வெட்டிய இந்திய நிறுவனம்!

லாவா யுவா 3 ப்ரோவிற்கு முன்னதாக, கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.9999 க்கு லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G) என்கிற பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. இதற்கிடையில் ​​லாவா ஸ்ட்ராம் 5ஜி (Lava Strom 5G) என்கிற இன்னொரு புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எக்ஸ் தளத்தில் (X Platform) லாவா பகிர்ந்துள்ள ஒரு புதிய டீஸர் போஸ்டரின்படி, லாவா ஸ்ட்ராம் 5ஜி விரைவில் அறிமுகமாகும். இது தவிர்த்து லாவா இணையதளம் (Lava Website) மற்றும் அமேசான் இந்தியா (Amazon India) வலைதளங்களிலும் இந்த போனிற்கான மைக்ரோசைட்டுகள் லைவ் ஆகியுள்ளன. ஆக இது அறிமுகமான பின்னர் அமேசான் வழியாக விற்பனை செய்யப்படுவதும் உறுதியாகியுள்ளது.

கிடைச்ச கேப்புல.. இன்னொரு கிடா வெட்டிய இந்திய நிறுவனம்!

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? மைக்ரோசைட்டில் உள்ள புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது லாவா ஸ்ட்ராம் 5ஜி-யின் பேக் பேனலில், வட்ட வடிவிலான டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Circular Dual Rear Camera Setup) காண முடிகிறது. அதனருகில் சிறிய வட்ட வடிவிலான எல்இடி யூனிட்டும் (LED Unit) உள்ளது. வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் பவர் பட்டன் ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

என்ன விலைக்கு வரும்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அபிஷேக் யாதவ்வின் (@yabhishekhd) கூற்றுப்படி, லாவாவின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட்டை (MediaTek Dimensity 6100+ SoC) பேக் செய்யும் மற்றும் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும்.

கிடைச்ச கேப்புல.. இன்னொரு கிடா வெட்டிய இந்திய நிறுவனம்!

லாவா ஸ்ட்ராம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனை போலவே 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகலாம்; அதாவது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்.

லாவா VS சீன நிறுவனங்கள்: லாவாவின் இந்த பேக் டூ பேக் அறிமுகங்கள் சீன மொபைல் நிறுவனங்களை பெரிய அளவில் கலக்கம் அடைய செய்யாது என்றாலும் கூட, பட்ஜெட் விலை 5ஜி போன்களை தொடர்ச்சியான முறையில் அறிமுகம் செய்வதன் வழியாக.. 4ஜி-யில் இருந்து 5ஜி-க்கு மாற விரும்பும் பட்ஜெட்வாசிகளை கவர்ந்திழுக்க முடியும். ஏனென்றால் உண்மையான 5ஜி நெட்வொர்க் ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பிக்கவே போகிறது!

Photo Courtesy: Lava

More from GizBot

Best Mobiles in India

English summary
New 5G Phone Lava Storm Launch Soon India Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X