சத்தியமா ரூ.6099 தான்! பட்டித்தொட்டி எங்கும் தெறிக்கும் ஆர்டர்.. 6.6-இன்ச் டிஸ்பிளே, 8GB ரேம், 1TB மெமரி!
சூப்பர்-பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுபவர்களை குறிவைத்து இந்திய சந்தையில் வெறும் ரூ.6,099 க்கு ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:
அதென்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஐடெல் ஏ05எஸ் (Itel A05s) ஸ்மார்ட்போனை பற்றித்தான், இது கடந்த அக்டோபர் மாதத்தில் சிங்கிள் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (2GB RAM + 64GB Storage) ஆப்ஷனின் கீழ் இந்தியாவில் அறிமுகமானது.

தற்போது 3 மாதங்களுக்கு பிறகு, இதே ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் (4GB RAM + 64GB Storage) ஆப்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக இது அறிமுக விலையாக (Introductory price) இருக்கலாம். அதாவது விரைவில் இந்த போனின் புதிய ஸ்டரோஜ் ஆப்ஷனின் விலை அதிகரிக்கப்படலாம் என்று அர்த்தம்.
ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போன் கிரிஸ்டல் ப்ளூ (Crystal Blue), குளோரியஸ் ஆரஞ்சு (Glorious Orange), மெடோ கிரீன் (Meadow Green) மற்றும் நெபுலா பிளாக் (Nebula Black) என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது இது நாடு முழுவதும் உள்ள முன்னணி ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) மூலம் இயங்கும் இந்த ஐடெல் மாடல் டூயல் நானோ சிம் ஆதரவை (Dual Nano SIM Support) கொண்டுள்ளது. இது 6.6 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவை (HD+ IPS Display) கொண்டுள்ளது.
இதன் டிஸ்பிளே 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate), 120 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) மற்றும் 270 பிபிஐ பிக்சல் டென்சிட்டி (PPI Pixel Density) மற்றும் 720 x 1612 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் போன்றவைகளையும் கொண்டுள்ளது.

செல்பீ கேமராவிற்கான வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் (Waterdrop-style notch) வடிவமைப்பை கொண்டுள்ள இந்த என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் யுனிசாக் எஸ்சி9863ஏ சிப்செட் (Octa-core Unisoc SC9863A) மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சுவாரசியமாக, பயன்படுத்தாத ஸ்டோரேஜை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ கிட்டத்தட்ட 8 ஜிபி வரை விரிவாக்க முடியும். மேலும் மைக்ரோ எஸ்டி கார்டை (Micro SD Card) பயன்படுத்தி ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜையும் 1டிபி வரை விரிவாக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை, ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் (LED Flash) உடனான சிங்கிள் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா (8MP Single Rear Camera) உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை முன்பக்கத்தில் உள்ள 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா (5MP Selfie Camera) பூர்த்தி செய்கிறது.
சூப்பர்-பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட இதில் பின்புறமாக பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Fingerpirint Sensor) உள்ளது மற்றும் இது ஃபேஸ் அன்லாக் (Face Unlock) அம்சத்தையும் ஆதரிக்கிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. கடைசியாக ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
நம்பி வாங்கலாமா? ஐடெல் நிறுவனம் தனது ஏ05எஸ் ஸ்மார்ட்போனின்புதிய 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனலா அறிமுகம் செய்ய முக்கிய காரணமே, இந்த ஸ்மார்ட்போனின் 2ஜிபி ரேம் வேரியண்ட்டிற்கு இந்திய வாடிக்கையாளர்கள் கொடுத்த வரவேற்பே காரணம் என்பது போல் தெரிகிறது. ஆக ஒரு நல்ல என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனை தேடுபவர்கள் இதை தாராளமாக வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








