Home
Mobile

ஒரே போன் மீது 3 ஆபர்.. ரூ.20000 டிஸ்கவுண்ட், ரூ.2500 நோ-காஸ்ட் EMI.. லேட்டஸ்ட் Samsung மாடல் மீது ஆபர் மழை!

2025 ஜனவரி 22 ஆம் தேதி அன்று நடக்கவுள்ள கேலக்ஸி அன்பேக்டு நிகழ்விற்கு முன்னதாக சாம்சங் நிறுவனம் ஒரு சிறப்பு பண்டிகை கால சலுகையை (Samsung Festive Offer) அறிவித்துள்ளது. இதன் கீழ் சாம்சங் தனது லேட்டஸ்ட் கேலக்ஸி இசட்-சீரிஸ் போல்டபிள் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது

சாம்சங்கின் இந்த பண்டிகை கால சலுகையின் கீழ் 3 வகையான சலுகைகள் கிடைக்கிறது. ஒன்று - பேங்க் கேஷ்பேக்; இன்னொன்று - 24 மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ. இவ்விரு சலுகைகளும். மூன்றாவது - பண்டில் ஆபர். அதாவது ஸ்மார்ட்போனுடன் சேர்த்து கேலக்ஸி வாட்ச் அல்லது பட்ஸ் வாங்கினால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

ஒரே போன் மீது 3 ஆபர்.. ரூ.20,000 டிஸ்கவுண்ட்.. ரூ.2,500 நோ-காஸ்ட் EMI!

இந்த மூன்று சலுகைகளும் - சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் மீதும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 மீதான ஆபர்களை பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளின் இதை வாங்கினால் ரூ.15,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும். கூடவே ரூ.4,167 முதல் தொடங்கும் 24 மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் கிடைக்கும், நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விலை ரூ.1,64,999 முதல் தொடங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 6 மீதான ஆபர்களை பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளின் இதை வாங்கினால் ரூ.20,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும். கூடவே ரூ.2,500 முதல் தொடங்கும் 24 மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் கிடைக்கும், நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விலை ரூ.1,09,999 முதல் தொடங்குகிறது.

பண்டில் ஆபரை பொறுத்தவரை, கேலக்ஸி இஸட் போல்ட் 6 அல்லது கேலக்ஸி இஸட் பிளிப் 6 மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா (Galaxy Watch Ultra) மீது ரூ.18,000 தள்ளுபடியை பெறலாம் மற்றும் கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ (Galaxy Buds 3 Pro) மீது ரூ.7,000 தள்ளுபடியை பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 7.6-இன்ச் அளவிலான QXGA+ டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் அவுட்டர் டிஸ்பிளேவானது 410 பிபிஐ மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவாக உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 10எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

செல்பீக்களுக்கு, கவர் ஸ்கிரீனில் 10எம்பி கேமராவும், இன்னர் டிஸ்பிளேவில் 4எம்பி அண்டர் டிஸ்பிளே கேமராவும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, 4400mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதாவது இது 25W வயர்டு, 15W வயர்லெஸ் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

2025 சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் லைவ் ஸ்ட்ரீம் விவரங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி இது வருகிற ஜனவரி 22 ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. இந்நிகழ்வு இந்திய நேரடி இரவு 11.30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வு சாம்சங்.காம் (Samsung.com), சாம்சங் நியூஸ்ரூம் (Samsung Newsroom) மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் (Samsung YouTube) வழியாக நேரலையில் ஒளிபரப்பப்படும்.

2025 இல் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்? வழக்கம் போல 3 மாடல்கள் அறிமுகமாகலாம்: கேலக்ஸி எஸ்25 (Galaxy S25), கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Galaxy S25 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra). அல்லது கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் (Galaxy S25 Slim) மாடலுடன் சேர்த்து மொத்தம் 4 மாடல்கள் கூட அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New 2025 festive offer From Samsung Up to Rs 20000 Discount on Galaxy Z Fold 6 Galaxy Z Flip 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X