Home
Mobile

Moto-வா கொக்கா.. 16GB ரேம், 5000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே.. பட்ஜெட் விலையில் 2 5G Phone-கள் அறிமுகம்!

மோட்டோரோலா நிறுவனம் அதன் ஜி சீரீஸின் கீழ் 2 புதிய 5ஜி போன்களை அறிமுகம் செய்துள்ளது: மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) மற்றும் மோட்டோ ஜி 5ஜி (2024). இவ்விரு போன்களின் விலை என்ன? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளன? இதோ விவரங்கள்:

பெயர் குறிப்பிடுவது போலவே இவ்விரு புதிய மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே பழைய மோட்டோ ஜி பவர் 5ஜி (2023) மற்றும் மோட்டோ ஜி 5ஜி (2023) ஆகியவற்றின் அப்கிரேடட் வெர்ஷன்கள் ஆகும். இரண்டு புதிய 2024 மாடல்களுமே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளேக்களை கொண்டுள்ளன.

பட்ஜெட் விலையில் 2 மோட்டோ 5G Phone-கள் அறிமுகம்!

மேலும் இரண்டு மாடல்களுமே நீர்-விரட்டும் வடிவமைப்பை கொண்டுள்ளன மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கின்றன. முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை மோட்டோ ஜி பவர் 5ஜி (Moto G Power 5G) மாடலானது மீடிடாடெக் டைமன்சிட்டி 7020 (MediaTek Dimensity 7020) சிப்செட் உடன் வருகிறது. மறுகையில் உள்ள மோட்டோ ஜி 5ஜி (Moto G 5G) மாடலானது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Snapdragon 4 Gen 1) சிப்செட் மூலம் இயங்குகிறது.

மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் சப்போர்ட் உடன் வரும் மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

பட்ஜெட் விலையில் 2 மோட்டோ 5G Phone-கள் அறிமுகம்!

முன்னரே குறிப்பிட்டபடி, இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இன்பில்ட் ரேம்-ஐ ரேம் பூஸ்ட் தொழில்நுட்பம் மூலம் 16ஜிபி வரை விரிவாக்கவும் முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பம் உடனான 50எம்பி மெயின் கேமரா + ஆட்டோஃபோகஸுடன் கூடிய 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பட்ஜெட் விலையில் 2 மோட்டோ 5G Phone-கள் அறிமுகம்!

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போனானது 5ஜி, வைஃபை, ப்ளூடூத் மற்றும் என்எப்சி போன்றவைகளை ஆதரிக்கும். நீர்-விரட்டும் வடிவமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் ஆதரவு உடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன. கடிசியாகி இது 30W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

மோட்டோ ஜி 5ஜி (2024) ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இதுவும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. ஆனால் 6.6-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதிலும் விர்ச்சுவல் ரேம் அம்சம் உள்ளது ஆனால், இதை வைத்து அதிகபட்சமாக 8ஜிபி வரை மட்டுமே விரிவாக்கம் செய்ய முடியும். கேமராக்களை பொறுத்தவரை குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் கூடிய 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வரும் மோட்டோ ஜி 5ஜி 2024 ஸ்மார்ட்போனிலும் கூட டால்பி அட்மோஸ் ஆதரவு உடனான ஸ்பீக்கர்கள் உள்ளன. முன்னரே குறிப்பிட்டபடி இதுவும் நீர்-விரட்டும் கட்டமைப்புடன் வருகிறது மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் 18W டர்போபவர் சார்ஜிங் ஆதரவை மட்டுமே வழங்கும்.

2024 மோட்டோ ஜி பவர் 5ஜி மற்றும் மோட்டோ ஜி 5ஜி மாடல்களின் விலை நிர்ணயம்: மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.25,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

மறுகையில் உள்ள மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.17,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களும் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை; அதுகுறித்த தகவல் வெளியானதும் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New 2024 Moto G Power 5G and Moto G 5G Models Launched Check Price Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X