Home
Mobile

Realme-யின் ருத்ர தாண்டவம்.. இவ்ளோ கம்மி விலைக்கு.. 16GB ரேம், 1TB மெமரி, 120W சார்ஜிங், 5500mAh பேட்டரி-ஆ!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரியல்மி நிறுவனம் அதன் ஜிடி சீரிஸின் கீழ் ஒரு புதிய மாடலை இந்திய சந்தைக்கு கொண்டுவந்தது. அது ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) மாடலாகும். இதனை தொடர்ந்து இன்னொரு ஜிடி சீரிஸ் மாடலின் இந்திய அறிமுகமும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) ஸ்மார்ட்போன் ஆகும். இது எந்த தேதியில் இந்தியாவில் அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ரியல்மி ஜிடி 6 எப்போது அறிமுகமாகும்? நேற்று வரையிலாக "விரைவில் அறிமுகமாகும்" என்று மட்டுமே கூறப்பட்டு வந்த ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூன் 20 ஆம் தேதியன்று மதியம் 1.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை ரியல்மி நிறுவனம் இன்று (ஜூன்.3) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

Realme ருத்ர தாண்டவம்.. இவ்ளோ கம்மி விலைக்கு.. 16GB ரேம், 1TB மெமரிஆ!

ஜூன் 20 என்பது ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போனிற்கான உலகளாவிய வெளியீட்டு தேதி ஆகும். அதாவது குறிப்பிட்ட தேதியில் ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவிலும் அறிமுகமாகும் கூடவே மற்ற சில நாடுகளிலும் அறிமுகமாகும். வெளியீட்டு தேதி குறித்த டீஸர் வழியாக.. ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போன் ஏஐ அம்சங்களுடன் வரும் என்பதும், இதுவொரு "ஏஐ ஃபிளாக்ஷிப் கில்லர்" ஆக இருக்கும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ரியல்மி ஜிடி 6 ஆனது கடந்த 2024 மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ரியல்மி ஜிடி நியோ 6 (Realme GT Neo 6) ஸ்மார்ட்போனின் ரீபேட்ஜ்டு எடிஷன் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இரண்டு ஸ்மார்ட்போன்களுமே "கிட்டத்தட்ட" ஒரே மாதிரியான அம்சங்களை பேக் செய்யலாம்.

Realme ருத்ர தாண்டவம்.. இவ்ளோ கம்மி விலைக்கு.. 16GB ரேம், 1TB மெமரிஆ!

எனவே ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போனின் விலை விநிர்ணயத்தை வைத்து ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்கிற யோசனையை நம்மால் பெற முடியும். நினைவூட்டும் வண்ணம் ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.24,200 க்கு அறிமுகமானது.

ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போன் ஆனது 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விலை நிர்ணயம் இந்திய ருபாய் மதிப்பின்படி சுமார் ரூ.27,500 ஆகும். ஆக ஜூன் 20 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 6 ஆனது ரூ.25,000 - ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 SoC) உடன் இயக்கலாம். இது 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 6.78-இன்ச் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 1.5கே எல்டிபிஓ அமோஎல்இடி (LTPO AMOLED) டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி சென்சார் + 8 மெகாபிக்சல் சோனி IMX355 அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் சோனி IMX615 செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம். கடைசியாக இது 120W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5500mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New 2024 AI Flagship Killer Smartphone Price Under Rs 30000 Realme GT 6 Launch in India on June 20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X