Home
Mobile

புது Moto G13.. விலையை சொன்னா அப்படியே தூக்கிடுவீங்க.. வேற எந்த போனையும் வாங்க மாட்டீங்க!

மோட்டோ ஜி73 5ஜி (Moto G73 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்த கையோடு லெனோவோவிற்கு சொந்தமான மோட்டோரோலா (Motorola) நிறுவனம் வருகிற மார்ச் 30 ஆம் தேதியன்று இன்னொரு புதிய ஜி-சீரீஸ் மோட்டோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

நாம் இங்கே பேசுவது மோட்டோ ஜி13 (Moto G13) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது வருகிற மார்ச் 28 இல் இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்போடு சேர்த்து, மோட்டோ ஜி13-இன் முக்கிய அம்சங்கள் மற்றும் டிசைனை வெளிப்படுத்தும் பிரத்யேக மைக்ரோசைட் பிளிப்கார்ட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

விலையை சொன்னா Moto G13 போனை அப்படியே தூக்கிடுவீங்க!

மோட்டோ ஜி13 அம்சங்கள்: பிளிப்கார்ட்டின் அந்த லேண்டிங் பேஜின் (Landing Page) வழியாக மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 ப்ராசஸர் (MediaTek Helio G85 SoC) உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது 'ஸ்லிம்' மற்றும் 'லைட்' ஆன வடிவமைப்பை பெறும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், லேட்டஸ்ட் நியர் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், 50எம்பி குவாட் பிக்சல் கேமரா, டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உடனான ஸ்டீரிடோ ஸ்பீக்கர்ஸ், 90ஹெர்ட்ஸ் சப்போர்ட் உடனான 6.9 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி13-ல் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போனின் 50எம்பி மெயின் கேமராவுடன் ஒரு டெப்த் சென்சார் மற்றும் ஒரு மேக்ரோ சென்சார் இடம்பெறும். அதாவது இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தை பொறுத்தவரை, டிஸ்பிளேவில் உள்ள ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்.

இது 5000mAh பேட்டரி யூனிட் உடன் வருமென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது யூஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் 10W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங், தின்க்ஷீல்ட் (ThinkShield) பாதுகாப்பபு போன்றவைகளையும் எதிர்பார்க்கலாம்.

மோட்டோ ஜி13 விலை மற்றும் விற்பனை: சமீபத்திய லீக் தகவலொன்று இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.10,000 - ரூ.11,000 க்குள் இருக்குமென்று பரிந்துரைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, மோட்டோ ஜி13 வருகிற மார்ச் 29 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

இந்த ஸ்மார்ட்போனின் லேண்டிங் பேஜ் ஏற்கனவே பிளிப்கார்ட் வழியாக அணுக கிடைப்பதால், மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்திற்கு பின்னர் அது பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்பதில் எந்த குழப்பமும் வேண்டாம். இந்த ஸ்மார்ட்போன் மேட் சார்கோல் மற்றும் லாவெண்டர் ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வெளியாகும்.

இதற்கு முன்னதாக வெளியான மோட்டோ ஜி73 5ஜி (Moto G73 5G) ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, இது 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற சிங்கிள் வேரியண்ட்டில், மிட்நைட் ப்ளூ மற்றும் லூசன்ட் ஒயிட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் ரூ.18,999 க்கு இந்தியாவில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Budget Phone Is Coming Moto G13 To Launch In India On March 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X