அலெர்ட்! புது 5G போன் வாங்க போறவங்க கவனத்துக்கு! இத மிஸ் பண்ணிடாதீங்க!

|

சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையானது, மக்கள் மத்தியில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் (5G Smartphones) குறித்த தேடல் இரண்டு மடங்கு அதிகமாகி உள்ளதாக தெரிவிக்கிறது

அதற்கு முக்கிய காரணம் - நாட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள 5ஜி சேவைகள் தான் என்பதை நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை!

சுதாரித்துக்கொண்ட Samsung!

சுதாரித்துக்கொண்ட Samsung!

மோட்டோரோலா, ஒப்போ, ரியல்மி, போக்கோ போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களிடம் இருந்து ஏற்கனவே எக்கச்சக்கமான 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைத்தாலும் கூட, பெரிதும் நம்பப்படும் ஒரு பிராண்ட் என்கிற இடத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீதே பலரும் கவனம் செலுத்துகின்றனர்.

அதை நன்கு அறிந்த சாம்சங் நிறுவனம், சைலன்ட் ஆக இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

OnePlus பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் OnePlus பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் "இதை" ஒருத்தனும் கண்டுக்க மாட்டான்!

அதென்ன மாடல்கள்?

அதென்ன மாடல்கள்?

நாம் இங்கே பேசும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் - Samsung Galaxy A23 5G மற்றும் Galaxy A13 5G ஆகும். இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமான இந்திய வெளியீட்டு தேதிக்காக நாம் காத்திருக்கும் நேரத்தில், கேலக்ஸி A23 5G மற்றும் கேலக்ஸி A13 5G ஸ்மார்ட்போன்களின் (அதிகாரப்பூர்வ) விலை விவரங்கள் மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன!

கேலக்ஸி A13 5ஜி - எப்போது அறிமுகமாகும்?

கேலக்ஸி A13 5ஜி - எப்போது அறிமுகமாகும்?

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஏனெனில் இந்த லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் 5ஜி போன் ஆனது, வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி தைவானில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது (அதை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகமாகும்).

VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!

Samsung Galaxy A13 5G - என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

Samsung Galaxy A13 5G - என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வரும் Galaxy A13 5G ஆனது MediaTek Dimensity 700 சிப்செட், 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், அதில் டெப்த் மேப்பிங் மற்றும் மேக்ரோ போட்டோகிராபிக்கான இரண்டு 2எம்பி சென்சார்கள், 50எம்பி மெயின் கேமரா, வாட்டர் டிராப் நாட்ச் டிசைனில் 5எம்பி செல்பீ கேமரா போன்ற அம்சங்களை பேக் செய்யும்!

டிஸ்பிளே, கனெக்ட்விட்டி எல்லாம் எப்படி இருக்கும்?

டிஸ்பிளே, கனெக்ட்விட்டி எல்லாம் எப்படி இருக்கும்?

HD+ ரெசல்யூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வரும் கேலக்ஸி ஏ13 5ஜி ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது.

மேலும் இது AI ஃபேஸ் அன்லாக் ஆதரவையும் வழங்கும். இது 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட்டையும் கொண்டிருக்கும்.

தனது பெஸ்ட் 5G Phone மீது ரூ.3,000 விலைக்குறைப்பை அறிவித்த Samsung!தனது பெஸ்ட் 5G Phone மீது ரூ.3,000 விலைக்குறைப்பை அறிவித்த Samsung!

Galaxy A13 5G என்ன விலைக்கு வரும்?

Galaxy A13 5G என்ன விலைக்கு வரும்?

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4GB + 64GB ஆப்ஷன் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.18,500 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

மறுகையில் உள்ள 4GB + 128GB ஆப்ஷன் ஆனது சுமார் ரூ. 21,200 க்கு வாங்க கிடைக்கலாம்!

Samsung Galaxy A23 5G - என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

Samsung Galaxy A23 5G - என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

சாம்சங் கேலக்ஸி A23 5G ஆனது Snapdragon 695 SoC ப்ராசஸர், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும் 6.6-இன்ச் ஃபுல் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 50MP மெயின் கேமரா, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் குவாட்-கேமரா செட்டப், 8MP செல்பீ கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருக்கலாம்.

அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!

Galaxy A23 5G என்ன விலைக்கு அறிமுகமாகும்?

Galaxy A23 5G என்ன விலைக்கு அறிமுகமாகும்?

கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4GB + 64GB மற்றும் 6GB + 128GB என்கிற 2 ஸ்டோரேஜ் விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 4ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.23,800 க்கும், 6ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.26,500 க்கும் விற்பனை செய்யப்படலாம். இது வருகிற செப்டம்பர் 16 முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
New 2022 Mid Range 5G Smartphones: Samsung Galaxy A13 5G and Galaxy A23 5G. Check Launch Date in India, Specs, and Price.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X