ஐபோன்களே பொறாமைப்படும் அளவுக்கு தரமான அம்சங்களுடன் Samsung Galaxy Z Flip போன் அறிமுகம்.!

|

சாம்சங் நிறுவனம் இன்று நடைபெற்ற Galaxy Unpacked நிகழ்வில் புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 (Samsung Galaxy Z Flip 4) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஐபோன்களே பொறாமைப்படும் அளவுக்கு இந்த கேலக்ஸி இசட் பிளிப் 4 போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

எப்போது விற்பனை?

எப்போது விற்பனை?

வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி சர்வதேச சந்தையில் இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதை சாம்சங் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

10.6-இன்ச் டிஸ்பிளேவுடன் சும்மா கில்லி மாதிரி களமிறங்கும் Moto Tab G62: எப்போது அறிமுகம்?10.6-இன்ச் டிஸ்பிளேவுடன் சும்மா கில்லி மாதிரி களமிறங்கும் Moto Tab G62: எப்போது அறிமுகம்?

என்ன விலை?

என்ன விலை?

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போனின் ஆரம்ப விலை $999 (இந்திய மதிப்பில் ரூ.79,000) ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் ப்ளூ, போரா பர்பில், கிராஃபைட் மற்றும் பிங்க் கோல்ட் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த கேலக்ஸி இசட் பிளிப் 4 போனின் அம்சங்களைசற்று விரிவாகப் பார்ப்போம்.

Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!

சூப்பரான டிஸ்பிளே

சூப்பரான டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போன் ஆனது 6.7-இன்ச் பிரைமரி ஃபுல் எச்டி பிளஸ் Dynamic AMOLED 2X Infinity Flexடிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 22:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது
இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போன்.

இந்த பிரைமரி டிஸ்பிளேவை தவிர கேலக்ஸி இசட் பிளிப் 4 போனில் 1.9-இன்ச் Super AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. இது 260 x 512
பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த அவுட்டர் டிஸ்ப்ளே மூலம் பயனர்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ஹையோ! மவுஸாப்பா இது.. பார்த்தாலே தொட தோணுதே.! புது ASUS MD100 Marshmallow விலை என்ன?ஹையோ! மவுஸாப்பா இது.. பார்த்தாலே தொட தோணுதே.! புது ASUS MD100 Marshmallow விலை என்ன?

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போனில் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 + ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. மேலும் OneUI 4.1.1 சார்ந்த
ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் பிளிப் போன்.

குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

இது சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. வேற லெவல் போன்! Xiaomi MIX Fold 2 அறிமுகம் தேதி இது தான்!இது சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. வேற லெவல் போன்! Xiaomi MIX Fold 2 அறிமுகம் தேதி இது தான்!

அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போன் 12எம்பி அல்ட்ரா வைடு பிரைமரி சென்சார் ( f/2.2) + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் ( f/1.8) என்கிறடூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்தஅசத்தலான பிளிப் போன்.

போன்கள் மீது 25% முதல் 50% வரை தள்ளுபடி: டாப் பெஸ்ட் Amazon சலுகை இது தான்! மிஸ் பண்ணாம பாருங்க!போன்கள் மீது 25% முதல் 50% வரை தள்ளுபடி: டாப் பெஸ்ட் Amazon சலுகை இது தான்! மிஸ் பண்ணாம பாருங்க!

தனித்துவமான வசதி

தனித்துவமான வசதி

குறிப்பாக இந்த போனில் ஹேண்ட்ஸ்ஃப்ரீ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க FlexCam அம்சத்தை பேக் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் புதிய சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IRCTC அலர்ட்: இனி பெர்த் காலியாக இருந்தால் உடனே இன்ஸ்டன்ட் புக்கிங் செய்யலாமா? எப்படி?IRCTC அலர்ட்: இனி பெர்த் காலியாக இருந்தால் உடனே இன்ஸ்டன்ட் புக்கிங் செய்யலாமா? எப்படி?

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போனில் 3700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போன் 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகும்.

குறிப்பாக ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆகியவற்றை இந்த போன் ஆதரிக்கிறது.

அல்டிமேட் Vivo 5G போன் விரைவில் அறிமுகம்: விலையை சொன்னால் கட்டாயம் வாங்குவீங்க.!அல்டிமேட் Vivo 5G போன் விரைவில் அறிமுகம்: விலையை சொன்னால் கட்டாயம் வாங்குவீங்க.!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போன் மாடல். மேலும் இந்த போனின் எடை 187 கிராம் என்று கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
New 2022 Flagship Phone Samsung Galaxy Z Flip 4 Launched Full Specifications Sale From August 26: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X