OnePlus 10T அறிமுகம்: இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 2022 Flagship Phone-ஆ!

|

OnePlus நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக OnePlus 10T 5G இன்று (அதாவது ஆகஸ்ட் 3, 2022) இந்தியாவில் அறிமுகம் ஆனது. இது என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

OnePlus 10T ஸ்மார்ட்போன் ஆனது சற்றே பெரிய 6.7-இன்ச் அளவிலான AMOLED டிஸ்பிளேவை பேக் செய்கிறது. இதன் டிஸ்ப்ளே அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வரும், இது ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை 60ஹெர்ட்ஸ், 90ஹெர்ட்ஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ் இடையே மாற அனுமதிக்கும், இது பேட்டரி லைஃபையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Nothing கம்பெனிக்கு எவ்ளோ நக்கல் இருந்தா இப்படி செய்யும்? கேட்கும் போதே கடுப்பாகுது!Nothing கம்பெனிக்கு எவ்ளோ நக்கல் இருந்தா இப்படி செய்யும்? கேட்கும் போதே கடுப்பாகுது!

ப்ராசஸர் மற்றும் ரேம்:

ப்ராசஸர் மற்றும் ரேம்:

OnePlus 10T ஆனது Qualcomm Snapdragon 8 Gen 1 மூலம் இயக்கப்படும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இது தெர்மல் பெர்ஃபார்ம்மென்ஸை மேம்படுத்தும் மற்றும் OnePlus 10 Pro மாடலை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

மேலும் OnePlus நிறுவனம் Glacier Mat case எனப்படும், கேமர்களுக்காக ஒரு பிரத்யேக கேஸையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

உடன் OnePlus 10T ஆனது புதிய ஹைப்பர்பூஸ்ட் கேமிங் இன்ஜினையும் பேக் செய்கிறது, இது நீண்ட நேர கேமிங்கின் போது ஸ்மார்ட்போனின் செயல்திறனை மேம்படுத்த உதவும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் உடன் வருகிறது.

ஓஎஸ்:

ஓஎஸ்:

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஆக்சிஜன் ஓஎஸ் 13-ஐயும் அறிவித்துள்ளது. இந்த புதிய ஆண்ட்ராய்டு ஸ்கின் ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்டது மற்றும் யூசர் இன்டர்பேஸை மென்மையாகவும், நிலையானதாகவும் மாற்றுவதை இலக்காக கொண்டு பல புதிய அம்சங்களுடன் வருகிறது.

ஆனால் ஆக்சிஜன் ஓஎஸ் 13 அப்டேட் ஆனது முதலில் ஒன்பிளஸ் 10 ப்ரோவுக்கு தான் வரும் அதன் பின்னர் ஒன்பிளஸ் 10டி மற்றும் பிற ஒன்பிளஸ் மாடல்களுக்கு கிடைக்கும்.

கேமரா:

கேமரா:

OnePlus 10T ஆனது டூயல் LED ஃபிளாஷ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50-மெகாபிக்சல் சோனி IMX769 மெயின் சென்சார் (f/1.8 லென்ஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் ( 119.9 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ, f/2.2 லென்ஸ்) + 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!

பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்:

பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்:

OnePlus 10T ஸ்மார்ட்போன் ஆனது 150W SuperVooc ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்ட 4500mAh பேட்டரி உடன் வருகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, "இது முதல் மூன்று நிமிடங்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் சார்ஜ் செய்யும்".

10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்-ஐ கொடுக்கும் என்றும் OnePlus குறிப்பிடுகிறது. நிறுவனத்தின் இந்த புதிய சார்ஜிங் தொழில்நுட்பம் ஆனது 13 வெப்பநிலை சென்சார்கள் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் அல்காரிதம் ஆகியவற்றுடன் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் கூறப்படுகிறது.

விலை மற்றும் விற்பனை :

விலை மற்றும் விற்பனை :

OnePlus 10T ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.49,999 ஆகும். இது 12ஜிபி + 256ஜிபி மற்றும் 16ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழும் முறையே ரூ.54,999 மற்றும் ரூ.55,999 க்கு வாங்க கிடைக்கும். OnePlus 10T Glacier Mat Case-இன் விலை ரூ.1,499 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் இன்றே தொடங்கும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஓப்பன் சேல் (திறந்த விற்பனை) ஆனது வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் ஆரம்பிக்கும்.

இது Jade Green மற்றும் Moonstone Black என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

Photo Courtesy: OnePlus

Best Mobiles in India

English summary
New 2022 Flagship Phone OnePlus 10T 5G Price in India Full Specifications Open Sale From August 6

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X