ரூ.8,999-க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்!

|

இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை காட்டி, தோராயமாக இதன் விலை என்ன இருக்கும் என்று கேட்டால்... 100 க்கு 99 பேர் "ரூ.15,000 இருக்கும்" என்று தான் கூறுவார்கள்!

சிலர் மட்டுமே ரூ.10,000 என்பார்கள். ஆனால் இந்த ஸ்மார்ட்போன் அதை விட குறைவான விலை நிர்ணயத்தையே கொண்டுள்ளது.

என்ன பிராண்ட்? என்ன விலை? எப்போது விற்பனை?

என்ன பிராண்ட்? என்ன விலை? எப்போது விற்பனை?

இது என்ன ஸ்மார்ட்போன்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல், எதன் வழியாக வாங்க கிடைக்கும்? இந்த ஸ்மார்ட்போனின் மீது அறிமுக சலுகைகள் ஏதேனும் உண்டா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Samsung ஷாக் ஆகும் அளவிற்கு.. Amazon அறிவித்துள்ள ரூ.40,049 ஆபர்!Samsung ஷாக் ஆகும் அளவிற்கு.. Amazon அறிவித்துள்ள ரூ.40,049 ஆபர்!

இது Realme நிறுவனத்தின் லேட்டஸ்ட் போன் ஆகும்!

இது Realme நிறுவனத்தின் லேட்டஸ்ட் போன் ஆகும்!

இந்தியாவில், Realme நிறுவனம் இன்று (அதாவது செப்டம்பர் 6) அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அது ரியல்மி சி33 (Realme C33) ஆகும்.

ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் வந்தாலும் கூட, இது 50MP டூயல் ரியர் கேமரா செட்டப், 5000 mAh பேட்டரி, Unisoc T612 சிப்செட் மற்றும் 4GB வரை ரேம் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

2 ரேம் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்!

2 ரேம் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்!

ரியல்மி C33 ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: அது 3ஜிபி ரேம்+ 32ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆகும்,

3ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை நிர்ணயம் ரூ.8,999 ஆகும், மறுகையில் உள்ள 4ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை ரூ.9,999 ஆகும்.

பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!

எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

இது அக்வா ப்ளூ, நைட் சீ மற்றும் சாண்டி கோல்ட் என்கிற 3 அட்டகாசமான கலர் ஆப்ஷன்களின் கீழ் வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக அதன் முதல் ஃபிளாஷ் விற்பனையை சந்திக்கும்.

விற்பனைச் சலுகைகளைப் பொறுத்தவரை, IDFC வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் உங்களுக்கு ரூ.1,000 என்கிற தள்ளுபடி கிடைக்கும்.

ரூ.8,999 க்கு Realme C33 வொர்த்-ஆ?

ரூ.8,999 க்கு Realme C33 வொர்த்-ஆ?

இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? என்கிற முடிவுக்கு வர, நாம் ரியல்மி C33-யின் அம்சங்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

Realme C33 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் அளவிலான HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, சுவாரசியமாக இது 120Hz டச் சாம்ப்ளிங் ரேட்-ஐ வழங்குகிறது.

கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!

என்ன சிப்செட்? என்ன ஸ்டோரேஜ்?

என்ன சிப்செட்? என்ன ஸ்டோரேஜ்?

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் Unisoc T612 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 64 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. எஸ்டி கார்ட் வழியாக, இதன் மெமரியை 1TB வரை விரிவாக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த Realme UI S எடிஷனில் இயங்குகிறது.

ரியர் மற்றும் செல்பீ கேமராக்கள் எப்படி?

ரியர் மற்றும் செல்பீ கேமராக்கள் எப்படி?

பட்ஜெட் விலையின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, இந்த Realme ஸ்மார்ட்போன் 50MP AI கேமராவை பேக் செய்கிறது.

இதன் ரியர் கேமரா செட்டப் ஆனது பனோரமிக் வியூ, போர்ட்ரெய்ட் மோட், டைம்-லாப்ஸ் மற்றும் சூப்பர் நைட் மோட் உட்பட பல அம்சங்களை வழங்குகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 5MP செல்பீ கேமராவுடன் வருகிறது.

மிட்-ரேன்ஜ் ப்ரைஸ்ல.. சிங்கிள் ஸ்டோரேஜ்ல.. 'கிங்' போல ஒரு புதிய Vivo போன்!மிட்-ரேன்ஜ் ப்ரைஸ்ல.. சிங்கிள் ஸ்டோரேஜ்ல.. 'கிங்' போல ஒரு புதிய Vivo போன்!

என்ன பேட்டரி?

என்ன பேட்டரி?

Realme C33 ஆனது 10W சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000 mAh பேட்டரியை பேக் செய்கிறது.

எடையில் 187 கிராம் மற்றும் அளவீட்டில் 8.3 மிமீ தடிமன் உள்ள இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களும் உள்ளன.

இதுக்கு மேல் வேறு என்ன வேண்டும்? செப்டம்பர் 12 விற்பனைக்கு ரெடியாக இருங்க!

Most Read Articles
Best Mobiles in India

English summary
New 2022 Budget Smartphone Realme C33 Launched India Check Price Flipkart Sale Date

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X