India

எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!

|

ஒரு சிலருக்கு, குறிப்பிட்ட மொபைல் பிராண்டுகளை மட்டுமே பிடிக்கும். ஆகையால் அந்தந்த பிராண்டின் கீழ் அறிமுகமாகும் போன்களை மட்டுமே அவர்கள் வாங்குவார்கள்.

மற்ற சிலருக்கு பிராண்டுகள் பற்றி எந்த கவைலையும் இருக்காது. அவர்களின் முழு கவனமும் - "கொடுக்கும் பணத்திற்கு ஈடான அம்சங்கள் இருக்கிறதா?" என்பதில் மட்டுமே இருக்கும்!

நீங்கள் அப்படியான நபர்களில் ஒருவர் என்றால், இந்த லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் 99% உங்களுக்கானது தான்!

அப்படி என்ன ஸ்மார்ட்போன்?

அப்படி என்ன ஸ்மார்ட்போன்?

அது இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ (Infinix Hot 12 Pro) ஆகும். சீனாவை தளமாக கொண்ட 'டிரான்ஸ்ஷன்' குழுமத்திற்கு சொந்தமான இன்பினிக்ஸ் பிராண்டின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது இன்று (அதாவது ஆகஸ்ட் 2) தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

Zomato, Swiggy-யின் Zomato, Swiggy-யின் "ஆட்டத்தை" முடிக்க.. உணவகங்கள் எடுத்த அதிரடி முடிவு!

விலையை மீறிய அம்சங்கள்!

விலையை மீறிய அம்சங்கள்!

இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பார்க்கும் போது, "ரூ.10,000 பட்ஜெட்டில் இதுக்கு மேல வேற என்ன வேணும்?" என்கிற எண்ணமே ஏற்படுகிறது.

ஏனெனில் இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்-ஐ கொண்ட வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்ப்ளேவை பேக் செய்கிறது.

மேலும் Infinix Hot 12 Pro ஆனது UniSoc T616 SoC உடனாக 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் அதிகபட்சமாக 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்குகிறது.

அவ்வளவு தான் என்று நினைத்து விடாதீர்கள்!

அவ்வளவு தான் என்று நினைத்து விடாதீர்கள்!

இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்தாலும் கூட அதில் 50-மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது.

மேலும் இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன 5,000mAh பேட்டரியையும் வழங்குகிறது.

கடைசியாக இது 5ஜிபி அளவிலான விர்ச்சுவல் ரேம்-ஐயும் வழங்கும். அதாவது இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து "பயன்படுத்தப்படாத" 5ஜிபி-ஐ ரேம் ஆக "கடன்" வாங்கிக்கொள்ள முடியும்.

இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!

இந்தியாவில் Infinix Hot 12 Pro விலை மற்றும் விற்பனை?

இந்தியாவில் Infinix Hot 12 Pro விலை மற்றும் விற்பனை?

இன்பினிக்ஸ் Hot 12 Pro ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.10,999 க்கும், இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.12,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அறிமுக சலுகையாக, ஹாட் 12 ப்ரோவின் டாப்-எண்ட் மாடலை ரூ.11,999 வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

ரூ.9,999 க்கு வாங்குவது எப்படி?

ரூ.9,999 க்கு வாங்குவது எப்படி?

எலெக்ட்ரிக் ப்ளூ மற்றும் லைட்சேபர் என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும் இந்த லேட்டஸ்ட் இன்பின்க்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் Flipkart வழியாக விற்பனைக்கு வரும்.

அப்போது நீங்கள் Flipkart Axis Bank கார்டுகளைப் பயன்படுத்தி Infinix Hot 12 Pro-வை வாங்கினால் உங்களுக்கு 5 சதவீத கேஷ்பேக் அணுக கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் Kotak Mahindra Bank கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தினால் உங்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். ஆக நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ் வாங்கலாம்.

அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!

Infinix Hot 12 Pro-வை நம்பி வாங்கலாமா?

Infinix Hot 12 Pro-வை நம்பி வாங்கலாமா?

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் உங்களை ஈர்க்கவில்லை என்றால், இதன் விரிவான அம்சங்களை பற்றி பாருங்கள். பின்னர் வாங்கலாமா வேண்டாமா என்கிற முடிவுக்கு வாருங்கள்!

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட இன்ஃபினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான XOS 10.6 உடன் இயங்குகிறது.

இது 6.6 இன்ச் எச்டி+ (1,612x720 பிக்சல்கள்) லிக்விட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இதன் டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்ப்ளிங் ரேட், 480 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை வழங்குகிறது.

பட்ஜெட் போனுக்கு ஏற்ற ப்ராசஸர்!

பட்ஜெட் போனுக்கு ஏற்ற ப்ராசஸர்!

Infinix Hot 12 Pro ஆனது 8GB வரையிலான LPDDR4X ரேம் உடன் இணைந்து Octa-core 12nm UniSoc T616 SoC மூலம் இயக்கப்படுகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து "பயன்படுத்தாத" 5ஜிபி-ஐ ரேம் ஆக மாற்றும் அம்சத்தையும் கொண்டுள்ளது.

கேமரா செட்டப் - போதும்.. போதும்.. இது போதும்!

கேமரா செட்டப் - போதும்.. போதும்.. இது போதும்!

கேமராக்களை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ ஆனது டூயல் எல்இடி ஃபிளாஷ் மற்றும் AI ஆதரவு கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

அதில் f/1.6 லென்ஸுடன் கூடிய 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் + டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் AI-ஆதரவு கொண்ட 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. சுவாரசியமாக முன்புறத்தில் டூயல் LED ஃபிளாஷ் உள்ளது.

ஆடி மாசத்தை அதகளப்படுத்த வரும் 6 புது போன்கள்; Samsung டூ OnePlus வரை!ஆடி மாசத்தை அதகளப்படுத்த வரும் 6 புது போன்கள்; Samsung டூ OnePlus வரை!

ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் பெரிய பேட்டரி!

ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் பெரிய பேட்டரி!

ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் Infinix Hot 12 Pro ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 79 மணிநேர மியூசிக் பிளேபேக் டைம், 41 மணிநேர காலிங் டைம், 12 மணிநேர கேமிங் டைம் கிடைக்கும்.

இப்போது சொல்லுங்க... ரூ.9999 க்கு.. இதுக்கு மேல் வேறு என்ன வேண்டும்?!

Photo Courtesy: Flipkart

Most Read Articles
Best Mobiles in India

English summary
New 2022 Budget Phone Infinix Hot 12 Pro Flipkart Sale From August 8 Full Specifications Offer Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X