ஒரே போடு.. POCO-கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ.. பக்கா PRICE-ல்.. 12GB ரேம், 64MP OIS கேமரா, 67W சார்ஜிங்!
அடேங்கப்பா.. இவ்வளவு கம்மி விலைக்கு.. 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஓஐஎஸ் ஆதரவு உடனான 64எம்பி கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடன் ஒரு போக்கோ மாடலா! என்று ஆச்சரியப்பட வைக்கும் ஒரு ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
ஆனால் இது போக்கோ நிறுவனத்தின் புத்தம் புதிய மாடல் அல்ல. இது கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகமான போக்கோ எக்ஸ்6 5ஜி (Poco X6 5G) ஸ்மார்ட்போனின் புதிய 12 ஜிபி ரேம், + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனாகும்.

நினைவூட்டும் வண்ணம், கடந்த மாதம் இதே ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மூன்றாவதாக 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.23,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இது பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக மிரர் பிளாக் மற்றும் ஸ்னோஸ்டார்ம் ஒயிட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு உள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ (ICICI), எச்டிஎப்சி (HDFC), ஆக்சிஸ் (Axis) மற்றும் எஸ்பிஐ (SBI) பேங்க் கார்டுகளை அல்லது இஎம்ஐ பரிவர்த்தனைகளை (EMI transactions) பயன்படுத்தி போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும்.
கடந்த ஜனவரி மாதம் அறிமுகமான "பழைய" 8ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன்களின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, பேஸிக் வேரியண்ட் ரூ. 21,999 க்கும், டாப்-எண்ட் வேரியண்ட் ரூ.24,999 க்கும் வாங்க கிடைக்கிறது. மூன்றாவது மற்றும் புதிய வேரியண்ட் ஆனது இவ்விரு மாடல்களுக்கு இடையேயான பட்ஜெட்டில் அமர்கிறது.

போக்கோ எக்ஸ்6 5ஜி என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS() உடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போனுக்கு, மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் 1.5கே (1220 x 2712 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) மூலம் இயக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளன முன்பக்க கேமராவை பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
கடைசியாக போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 5100mAh பேட்டரியை பேக் செய்கிறது. ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. டீசண்ட் ஆன டிஸ்பிளே, போதுமான பெர்ஃபார்மென்ஸ், நல்ல கேமரா, நல்ல பேட்டரி லைஃப்பை வழங்கும்.. ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடும் எவருமே போக்கோ எக்ஸ்6 5ஜி மாடலை கருத்தில் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications