ஆளுக்கு 2 அள்ளி போடுங்க! வெறும் ரூ.7999க்கு 6000mAh பேட்டரி.. 7GB ரேம் + 128GB.. AI கேமரா.. என்ன மாடல்?
வெறும் ரூ.7999 க்கு இப்படி ஒரு பவர் பேக்டு அம்சங்களை (Power Packed Features) கொண்ட ஸ்மார்ட்போனா என்று வியக்க வைக்கும்படியான ஒரு ஸ்மார்ட்போன், பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) சைலன்ட் ஆக பட்டியலிடப்பட்டு.. விற்பனையில் சக்கைபோடு போட்டுகொண்டு இருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனமானது, அதன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஸ்மார்ட்போனின் 128ஜிபி மாடலை (128GB Model) அறிமுகப்படுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 (Infinix Smart 7) ஸ்மார்ட்போன் ஆனது கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இது 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் கீழ் மட்டுமே வெளியானது.

இப்போது இது பிப்ளிப்கார்ட் வழியாக 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழும் வாங்க கிடைக்கும். அதுவும் நம்ப முடியாத ஆபர் விலையில் (Offer Price) வாங்க கிடைக்கிறது. இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஸ்மார்ட்போனின் புதிய 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் அசல் விலை (Original Price) ரூ.10,999 ஆகும்
ஆனால், தற்போது இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.7,99 9க்கு பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிது: நைட் பிளாக் (Night Black), எமரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் அஸூர் ப்ளூ (, and Azure Blue).
இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 அம்சங்கள்: 128ஜிபி என்கிற புதிய இன்டர்னல் ஸ்டோரேஜை தவிர்த்து கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகமான இன்டர்ன்ஸ்ல் ஸ்மார்ட் 7 மாடலுக்கும், புதிய வேரியண்ட்டிற்கும் இடையே உள்ள அம்சங்களில் எந்த வேறுபாடுகள் இல்லை. அதாவது இரண்டுமே ஒரே மாதிரியான அம்சங்களையே பேக் செய்கின்றன.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் அளவிலான எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் (HD+ Display) வருகிறது, இது 500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (500 nits of peak brightness) மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் (water drop notch.) வடிவமைப்பை கொண்டுள்ளது.
சுவாரசியமாக இதுவொரு சூப்பர்-பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் (Finger Print Scanner) உள்ளது; இது ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் பொருத்தப்பட்டபட்டுள்ளது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் எஸ்சி9863ஏ சிப்செட் (Unisoc SC9863A SoC) உடன் வருகிறது. ரூ.8000 பட்ஜெட்டில், இதுவொரு சக்திவாய்ந்த செயல்திறனை (Powerful Performance) வழங்கும் ஒரு சிப்செட் என்பதில் சந்தேகமே வேண்டாம் .
கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போனில் ஒரு தனித்துவமான ரேம் விரிவாக்க அம்சமும் (RAM expansion feature) உள்ளது. இந்த அம்சத்தின் கீழ் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து 3 ஜிபி வரையிலான ரேம்-ஐ கடன் வாங்கி ஸ்மார்ட்போனின் மொத்த ரேம் அளவை 7ஜிபி ஆக அதிகரிக்க முடியும்.
மேலும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஆனது ஈர்க்கக்கூடிய 6,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது நீண்ட கால பயன்பாட்டை உறுதி செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை இதன்பின்புறத்தில், ஏஐ லென்ஸ் (AI Lens) உடனான 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் 5 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் (Dual SIM) மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், யூஎஸ்பி-டைப் சி போர்ட், டூயல் 4ஜி வோல்ட்இ ஆதரவு (4G VoLTE Support) மற்றும் ப்ளூடூத் 4.2 போன்றவைகள் உள்ளன. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ (Android 12 OS) அடிப்படையாக கொண்ட எக்ஸ்ஓஎஸ் 12 (XOS 12) மூலம் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








