அடிதூள்! ரூ.8000 பட்ஜெட்ல இப்படி ஒரு Phone-ஆ.. 128GB ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி, HD+ டிஸ்பிளே! என்ன மாடல்?
இந்தியாவில் உள்ள பட்ஜெட் வாசிகளை குறிவைத்து ஷாவ்மீயின் துணை பிராண்ட் ஆன ரெட்மி சைலன்ட் ஆக ஒரு வேலையை பார்த்துள்ளது. பட்ஜெட் விலைப்பிரிவில்.. விற்பனையில் சக்கைப்போடு போடும் தனது பிரபலமான ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் ரூ.8000 பட்ஜெட்டில்!
கடந்த மே மாதத்தில் ரெட்மி நிறுவனத்தின் புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஆக ரெட்மி ஏ2 பிளஸ் (Redmi A2 Plus) அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் இது சிங்கிள் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே வெளியானது.

அறிமுகமான நாள் முதல் தற்போது வரையிலாக ரெட்மி ஏ2 பிளஸ் (4ஜிபி+64ஜிபி) மாடலானது ரூ.8000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களில் (Best Entry-level Smartphone) ஒன்றாக திகழ்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.7999 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தான் ரெட்மி ஏ2 பிளஸ் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் அறிமுகமான வேகத்தில் விற்பனைக்கும் வந்துள்ளது. இந்த புதிய ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை நிர்ணயம் ரூ.8499 ஆகும்.
இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India), ஷாவ்மீ நிறுவனத்தின் அதிகாரபூர்வமான வலைத்தளமான எம்ஐ.காம் (MI.com) மற்றும் ஷாவ்மீ ரீடெய்ல் பார்ட்னர்கள் வழியாக வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதிலுள்ள நிறைகள் மற்றும் குறைகள் (Pros and Cons) என்னென்ன? என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்:
ரெட்மி ஏ2 பிளஸின் 4ஜிபி + 64 ஜிபி மற்றும் 4ஜிபி + 128ஜிபி வேரியண்ட்களுக்கு இடையே எந்த வேறுபாடுகளும் இருக்காது. இரண்டுமே ஒரே மாதிரியான அம்சங்களையே பேக் செய்கின்றன. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 720x1600 பிக்சல் ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate), 400 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் (Peak Brightness) உடனான 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி26 சிப்செட் (Octa-core MediaTek Helio G26 chipset) உடன் 4ஜிபி வரையிலான ரேம் மூலம் இயக்கப்படுகிறது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலுமே மைக்ரோ எஸ்டி கார்டிற்கான (microSD card) ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷனின் (Android 12 G Edition) கீழ் இயங்குகிறது மற்றும் டூயல் சிம் ஆதரவையும் வழங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி ஏ2 பிளஸ் ஸ்மார்ட்போனில் சிங்கிள் 8எம்பி ரியர் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் 5எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ள இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் (Finger Print sensor) உள்ளது.
ரெட்மி ஏ2 பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ள நிறைகளை பற்றி பேசும்போது இது விலையை மீறிய நல்ல வடிவமைப்பை பெற்றுள்ளது; என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட இதன் ரியர் கேமராவானது ஒப்பீட்டளவில் நல்ல அவுட்புட்டை வழங்குகிறது; இதன் டிஸ்பிளேயும் கூட நன்றாக இருக்கிறது.
மேலும் சுவாரசியமாக இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13-இன் கோ வெர்ஷனுடன் வருகிறது; இந்த பட்ஜெட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருப்பதும் கூட ஒரு நிறை தான். குறைகளை பற்றி பேசும்போது, இதன் பேட்டரி டிபார்ட்மெண்டில் 2 பெரிய ஓட்டைகள் உள்ளன: ஒன்று - இதன் சார்ஜிங் ஸ்பீட் மெதுவாக உள்ளது; இரண்டாவது - இந்த ஸ்மார்ட்போனில் யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) இல்லை!


Click it and Unblock the Notifications








