பிளிப்கார்ட்டில் பகீர்.. லேட்டஸ்ட் 10001mAh பேட்டரி, Realme 5ஜி போன் மீது ரூ.2800 விலை குறைப்பு.. எந்த மாடல்?
அறிமுகம் செய்யப்பட்டு முழுதாக 1 மாதம் கூட ஆகாத.. ரியல்மி (Realme) நிறுவனத்தின் 10001எம்ஏஎச் பேட்டரி ஸ்மார்ட்போனின் (10001mAh Battery Smartphone) மீது விலை குறைப்பை அறிவித்து பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது "அதகளம்" செய்து வருகிறது. எந்த மாடல்? அறிமுக விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
எந்த மாடல்? நாம் இங்கே பேசுவது - கடந்த மார்ச் 5 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி நார்சோ பவர் 5ஜி (Realme Narzo Power 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்த லேட்டஸ்ட் ரியல்மி ஸ்மார்ட்போனின் விலை தான் தற்போது பிளிப்கார்ட்டில் குறைக்கப்பட்டுள்ளது.

அசல் விலை என்ன? அறிமுகமான நாளில் இருந்து ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கும் வாங்க கிடைத்தது.
ஆபர் விலை என்ன? தற்போது பிளிப்கார்ட்டில் ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், டைட்டன் ப்ளூ கலர் ஆப்ஷன் ரூ.27,999 க்கு பதிலாக ரூ.25,175 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், டைட்டன் சில்வர் கலர் ஆப்ஷன் ரூ.29,999 க்கு பதிலாக ரூ.27,355 க்கு வாங்க கிடைக்கிறது.
மேற்கண்ட ஆபர் விலைகள் எப்போது வேண்டுமானாலும் அசல் அறிமுக விலைக்கு திரும்பலாம். ஆக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரியல்மி நர்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போனை முடிந்த வேகத்தில், பிளிப்கார்ட் வழியாக ஆர்டர் செய்து விடவும். லேட்டஸ்ட் மாடலுக்கு இவ்வளவு வேகத்தில் இப்படி ஒரு ஆபர் கிடைப்பது - அரிது தான்!
ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.8-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 240Hz டச் சாம்பிளிங் ரேட்
- 94 சதவீத ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ
- HDR10+ சான்றிதழ்
- 6500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ரியல்மி யுஐ 7.0
- 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப்செட்
- ஆர்ம் மாலி-ஜி615 ஜிபியு
- 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம்
- 256ஜிபி வரையிலான UFS3.1 ஸ்டோரேஜ்
- ஆட்டோஃபோகஸ் மற்றும் 2-ஆக்சிஸ் OIS ஆதரவுடன் கூடிய 50-மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி சென்சார்
- 8-மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா
- 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாப்பதற்காக IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ்
- மிலிட்டரி-கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ்
- அளவீட்டில் 162.26x76.15x9.08 மிமீ
- எடையில் சுமார் 219 கிராம்
ரியல்மி நார்சோ பவர் 5ஜி-யின் தனித்துவமான அம்சம் அதன் பேட்டரி தான். இது 10,001எம்ஏஎச லித்தியம்-அயன் பாலிமர் செல்லை பயன்படுத்துகிறது. இந்த பேட்டரி குறைந்தபட்சம் 1,500 சார்ஜ் சுழற்சிகள் வரை தாங்கும் திறன் கொண்டது; இது சூப்பர்வூக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், பேட்டரியை 1 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை சுமார் 85 நிமிடங்களில் நிரப்பும் என்று கூறப்படுகிறது.
ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரியானது, ஒரே சார்ஜில் 31.2 மணிநேரம் வரை யூட்யூப் வீடியோக்களையும், 21.4 மணிநேரம் வரை நேவிகேஷன் டைமையும், 185.7 மணிநேரம் வரை ஸ்பாட்டிஃபை மியூசிக்கையும் வழங்கும் என விளம்பரப்படுத்தப்படுகிறது. சூப்பர் பவர் சேவிங் மோட் மூலம், 5 சதவீத பேட்டரியில் 218 நிமிடங்கள் வரையிலான காலிங் டைமும் அல்லது 46.8 மணிநேரம் வரை ஸ்டாண்ட்பை டைமும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








