Home
Mobile

144MP கேமரா..180W சார்ஜிங்.. நம்ப முடியாத கம்மி விலை.. இப்படி ஒரு NOKIA போனுக்கு தான் பலரும் ஏங்கினோம்!

ஒரு சில மாடல்களை தவிர்த்து கடந்த சில ஆண்டுகளாகவே, ஒவ்வொரு முறையும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் போதெல்லாம், நோக்கியாவின் டை-ஹார்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சாம்சங், ஒன்பிளஸ் அளவிற்கு ஒரு நல்ல மாடல் அறிமுகமாகாதா என்று பலரும் ஏங்கி தவிக்கின்றனர்.

அந்த ஏக்கத்தை தீர்த்துவைக்கும் படியான ஒரு "தரமான" நோக்கியா ஸ்மார்ட்போன் (New Nokia Smartphone) இந்திய அறிமுகத்திற்கு தயாராகி உள்ளது. அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

144MP கேமரா, 180W சார்ஜிங்.. நம்ப முடியாத கம்மி விலையில் NOKIA C99!

அறிமுகத்திற்கு ரெடியான நோக்கியாவின் மேஜிக் பாக்ஸ்!

நாம் இங்கே பேசுவது நோக்கியா சி99 (Nokia C99) ஸ்மார்ட்போனை பற்றித்தான். நோக்கியா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை "மேஜிக் பாக்ஸ்" (Magic Box) என்று அழைக்கிறது. மேஜிக் பாக்ஸ் என்கிற பெயருக்கு பின்னால் உள்ள சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை; ஒருவேளை இது சில நம்பமுடியாத அம்சங்களை பேக் செய்வதால் இப்பெயரை பெற்று இருக்கலாம்.

நோக்கியா சி99 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி நோக்கியா சி99 ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் அளவிலான எல்டிபிஓ அமோஎல்இடி (LTPO AMOLED) டிஸ்பிளே, குவால்காமின் லேட்டஸ்ட் ஹை-எண்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) ப்ராசஸர், 144 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் 180W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு போன்ற முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும்.

நோக்கியா சி99 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

நோக்கியா சி99 ஸ்மார்ட்போனில் உள்ள லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது 16ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்படலாம். மேலும் இதன் 6.7-இன்ச் டிஸ்பிளேவானது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவு மற்றும் கொரில்லா கிளாஸ் 7 ப்ரொடெக்ஷன் உடன் வரலாம். இதன் 144எம்பி மெயின் கேமராவுடன் 64எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 48எம்பி டெலிஃபோட்டோ கேமரா இணைக்கப்படலாம்.

நோக்கியா சி99 எதிர்பார்க்கப்படும் விலை

ட்விட்டர் வழியாக லீக் ஆன ஒரு தகவலின்படி நோக்கியா சி99 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் சுமார் ரூ.45,000-ஐ சுற்றி இருக்கும். உண்மையிலேயே இந்த விலை நிர்ணயத்தை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை; ஏனென்றால் நோக்கியா சி99-இல் உள்ள அம்சங்கள் அப்படி! ஒருவேளை இது உண்மையிலேயே ரூ.45,000 க்குள் அறிமுகம் செய்யப்பட்டால் இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் பெரும்பாலான சாம்சங் மற்றும் ஒன்பிளஸின் பிளாக்ஷிப் போன்கள் கதிகலங்கி விடும்!

நோக்கியா சி99 எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்?

நோக்கியா பிராண்டிங் போன்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடம் இருந்து நோக்கியா சி99 ஸ்மார்ட்போனின் அறிமுகம், அம்சங்கள், விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் இது 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அறிமுகமாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா சி99 தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வரை மேற்கண்ட எல்லா தகவல்களையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது - குறிப்பாக ரூ.45,000 என்கிற விலையை!

More from GizBot

Best Mobiles in India

English summary
Never Seen Before Nokia Smartphone to launch soon In India Check Nokia C99 Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X