Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர் போடுறாங்க.. வெறும் ரூ.21,300-க்கு விற்பனை செய்யப்படும் iPhone 15 மாடல்.. வாங்குவது எப்படி?

ஆப்பிளின் ஐபோன் 16 சீரிஸ் (Apple iPhone 16 Series) பற்றிய லீக்ஸ் தகவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் நிலைப்பாட்டில்.. ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) மாடல் மீது கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளும் கூட அதிகரிக்கப்பட்டு கொண்டே வருகின்றன. அதிலொரு பகுதியாக, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவானது (Amazon India Website) ஐபோன் 15 மாடலை முன்னெப்போதும் இல்லாத அளவிலான விலையான ரூ.21,300 க்கு விற்பனை செய்கிறது. இந்த விலைக்கு ஐபோன் 15-ஐ வாங்குவது எப்படி? இதோ விவரங்கள்:

ஐபோன் 15-ஐ ரூ.21,300 க்கு வாங்க அமேசான் வழியாக கிடைக்கும் 3 வகையான சலுகைகளை நீங்கள் அணுக வேண்டியிருக்கும். முதல் சலுகை - அமேசான் இந்தியாவின் 11% நேரடி தள்ளுபடி. தற்போது ஐபோன் 15 மாடலின் 128ஜிபி பிளாக் கலர் வேரியண்ட் ஆனது அமேசானில் ரூ.71,400 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது அசல் விலையான ரூ.79,900 இல் இருந்து 11% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது.

வெறும் ரூ.21,300-க்கு விற்பனை செய்யப்படும் iPhone 15 மாடல்!

இரண்டாவதாக - அமேசான் இந்தியா வழங்கும் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி. ஐபோன் 15 மாடலை வாங்குவதற்காக, நல்ல நிலையில் உள்ள உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்யும் பட்சத்தில், உங்களுக்கு ரூ.44,250 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸ் கிடைக்கும். இதன் மூலம் ஐபோன் 15 மாடலின் விலையை ரூ.27,249 ஆக குறைக்க முடியும்.

கடைசியாக - அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஐபோன் 15-ஐ வாங்கும் போது கூட்டுத்தள்ளுபடியாக ரூ.5,949 வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கும். இப்படியாக, மேற்கண்ட 3 சலுகைகள் மற்றும் தள்ளுபடியை மிகச்சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் ஆப்பிள் ஐபோன் 15 மடலின் இறுதி ஆபர் விலையை வெறும் ரூ.21,300 க்கு கொண்டு வரமுடியும்.

வெறும் ரூ.21,300-க்கு விற்பனை செய்யப்படும் iPhone 15 மாடல்!

அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.47,940 க்கான பொருளை வாங்கும் போது அவர்களுக்கு ரூ.5,949 வரையிலான உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூடுதலாக அமேசான் ப்ரைம் மெம்பர்கள் (Amazon Prime Members), அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் பர்சேஸ் செய்யும் போது 5% கேஷ்பேக்கை பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் சற்றே பழைய ஐபோன் 14 மாடல் மீதான சலுகைகளை தேடுகிறீர்கள் என்றால்.. அமேசான் இந்தியாவில் இருந்து அப்படியே பிளிப்கார்ட் வலைத்தளத்திற்கு (Flipkart Website) செல்லவும். அங்கே ஐபோன் 14 மீது ரூ.13,000 விலைக்குறைப்பும், ரூ.26,000 எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியும் அனுக கிடைக்கிறது.

வெறும் ரூ.21,300-க்கு விற்பனை செய்யப்படும் iPhone 15 மாடல்!

பிளிப்கார்ட்டில் ஐபோன் 14 ஆனது ரூ.56,999 க்கு விற்பனை செய்கிறது. இது எந்தவிதமான வங்கி சலுகைகளும் இல்லாத நேரடி தள்ளுபடி விலையாகும். இதுதவிர்த்து உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் ஐபோன் 14 மாடலின் இறுதி ஆபர் விலையை இன்னும் குறைக்க முடியும்.

எக்ஸ்சேன்ஜ் ஆபரை பொறுத்தவரை, உங்களிடம் பழைய ஐபோன் 12 இருந்தால், அதை எக்ஸ்சேஞ்ச் செய்ய விரும்பினால், அதற்கு ரூ.20,000 வரை எக்ஸ்சேன்ஜ் வேல்யூ கிடைக்கும். ஒருவேளை நீங்கள் உங்களுடைய பழைய ஐபோன் 13 மாடலை எக்ஸ்சேன்ஜ் செய்தால், அதற்கு ரூ.26,000 வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

ஐபோன் 15-க்கு பதிலாக ஐபோன் 14-ஐ வாங்கலாமா? ஐபோன் 15 மாடலை வாங்குவதே நல்லது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் 15 மாடலானது பஞ்ச்-ஹோல் டிசைனை பெற்றுள்ளது, இது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளேவை பேக் செய்கிறது. கேமரா பிரிவில் குறிப்பிடத்தக்க அப்கிரேட் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் 48 மெகாபிக்சல் மெயின் ரியர் கேமராவானது 'ரிச்' ஆன மற்றும் 'ஷார்ப்' ஆன புகைப்படங்களை வழங்குகிறது.

மேலும் ஆப்பிள் ஐபோன் 14 உடன் ஒப்பிடும்போது ஐபோன் 15 மாடலின் பேட்டரியானது "சிறிய அளவிலான" மேம்பாட்டினை பெற்றுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, ஐபோன் 15 மாடலானது 2 நாட்கள் என்கிற பேட்டரி லைஃப்பை வழங்கும். ஆனால் உண்மையில் இது, சராசரி பயன்பாட்டின் கீழ் இது ஒரு நாளுக்கும் குறைவான பேட்டரி லைஃப்பையே வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Never Ever Cheapest Selling Price of Apple iPhone 15 Buy At Just Rs 21300 in Amazon India How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X