கொத்து கொத்தா ஆர்டர்.. OnePlus நோர்ட் போனுக்கு Earbuds ப்ரீ.. ரூ.2000 டிஸ்கவுண்ட் வேற.. யாரு விடுவா?
ஒட்டுமொத்த ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் பிரியர்களுக்கும் அமேசான் (Amazon) தளத்தில் குவியும்படியான ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) போனுக்கு ரூ.2,000 டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், ரூ.2,199 மதிப்புள்ள நோர்ட் பட்ஸ் 2ஆர் (Nord Buds 2R) இயர்பட்ஸ் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 3 அம்சங்கள் (OnePlus Nord 3 Specifications): இந்த ஒன்பிளஸ் போன் 6.74 இன்ச் (2772×1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் (Color Gamut) மற்றும் 1440Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் சப்போர்ட் வருகிறது.

இந்த போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 9000 4என்எம் (Octa Core Dimensity 9000 4nm) சிப்செட் வருகிறது.
அதோடு மாலி ஜி710 10-கோர் ஜிபியு (Mali-G710 10-Core GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. டுயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் ரியர் கேமரா டிரிபிள் சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் கூடிய 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராக்களுடன் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த நோர்ட் போனில் 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. IP54 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash Resistant) வருகிறது.
இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்தவரை, ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 6 (Wi-Fi 6), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS), 5ஜி மற்றும் டுயல் 4ஜி சப்போர்ட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 போன் மிஸ்டி கிரீன் (Misty Green) மற்றும் டெம்பஸ்ட் கிரே (Tempest Gray) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இதன் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.33,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் அமேசான் (Amazon) தளத்தில் நம்ப முடியாத சலுகைகளும், ஆஃபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 போனை அமேசானில் ஆர்டர் செய்வோர்களுக்கு ரூ.2,199 மதிப்புள்ள நோர்ட் பட்ஸ் 2ஆர் (Nord Buds 2R) இயர்பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆக்சிஸ் மற்றும் சிட்டி வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கும் ஒன்கார்டு கிரெடிட் கார்டுக்கும் ரூ.2,000 மதிப்பில் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் போன் வாங்க திட்டம் போட்டவர்களுக்கு ஒன்பிளஸ் இயர்பட்ஸ் சலுகையோடு அமேசான் ஆஃபர் வழங்கி அசத்தியிருக்கிறது. இந்த ஆஃபர் எப்போது வேண்டுமானாலும், மாற்றப்படலாம் அதேபோல இந்த போன் பிளிப்கார்ட்டில் தள்ளுபடியுடன் ரூ.30,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications