Home
Mobile

அதிக விலைக்கு நோ...நோ...சொல்லும் நேனோ மொபைல்!

By Super

அதிக விலைக்கு நோ...நோ...சொல்லும் நேனோ மொபைல்!
சீன நிறுவனமான கென் ஸின் டா புதிய டியூவல் வசதி கொண்ட மொபைலை உருவாக்கி உள்ளது. ரொம்ப கொறஞ்ச வெலைல என்ன இருக்கு? என்பது எல்லோரும் கேட்கும் பொதுவான கேள்வி.

இந்த பொதுவான கேள்விக்கும், தெளிவாக ஒரு பதிலை பெற முடியும். நேனோ எம்-2 என்ற இந்த மொபைல் குறைந்த விலை கொண்டது. பிளாக் மற்றும் சில்வர் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல், கையாள்வகற்கு மிக எளிதாக இருக்கும்.

விரிவுபடுத்தி கொள்ள கூடிய மெமரி வசதியினை கொண்ட இந்த மொபைல் விஜிஏ கேமராவினை கொண்டது. இந்த மொபைலில் சொல்லபோனால் உயர்ந்த தொழில் நுட்பங்கலெல்லாம் அதிகம் கொடுக்கப்படவில்லை. ஆனால் மொபைலுக்கு இருக்க வேண்டிய அடிப்படை வசதிகலெல்லாம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

புளூடூத், ஹெட்போன், யூஎஸ்பி போன்ற தொழில் நுட்ப வசதிகளையும் பெற முடியும். இந்த மொபைலில் டியூவல் சிம் வசதியினையும் பெற முடியும். ஆனால் குட்டியாக இருக்கும் இந்த மொபலை பார்த்தால், இதற்குள் எப்படி இரண்டு நெட்வொர்க் வசதிகளையும் பெற முடியும் என்று ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

அட! இது போன்ற நல்ல தொழில் நுட்பத்தினை வழங்கும் குறைந்த விலை கொண்ட, க்யூட் மொபைல்களை கையில் வைத்துருப்பதும் ஒரு ஃபேஷன் தான். இந்த நேனோ எம்-2 மொபைலை ரூ.1,200 விலையில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X