ஐபோன் எக்ஸ் வெளியே; கூகுள் அல்ட்ரா பிக்சல் ஸ்மார்ட்போன் உள்ளே.!

Written By:

கூகுள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பிக்சல் ஸ்மார்ட்போன்களான பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் வருகிற அக்டோபர் 4 ஆகிய தேதியன்று அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வால்லே மற்றும் டைமைன் என்ற குறியீட்டு பெயர்களைக் கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலைப்பாட்டில், பிக்சல் கருவிகள் தவிர்த்து கூகுள் இன்னொரு ஸ்மார்ட்போனை "மஸ்கி" என்ற குறியீட்டு பெயரின் கேள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் "மஸ்கி' ஒரு ரத்து செய்யப்பட்ட சாதனம் என்றும் கூறப்படும் கருத்துக்கள் இருந்தபோதிலும், இது தொடர்பாக எந்த தெளிவும் இல்லாமல் இருந்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நீளமான டிஸ்பிளே

நீளமான டிஸ்பிளே

வெளியான வீடியோ தெளிவான முறையில் அல்ட்ரா பிக்சல் தொலைபேசியின் லீக்ஸ் ப்ரெசன்ட்டேஷன் சார்ந்த பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்சிப்படுத்துகிறது. குறிப்பாக, காணப்படும் பெயர் ஆனது 'Pixel' என்று இல்லாமல் ஆனால் 'pixel' என்று உள்ளது.

நீளமான டிஸ்பிளே

நீளமான டிஸ்பிளே

கூறப்படும் இந்த அல்ட்ரா பிக்சல் ஸ்மார்ட்போனை காண்பிக்கும் வீடியோவானது, சாதனத்தின் பக்கங்களில் மெல்லிய பெஸல்கள் இருப்பதையும் மற்றும் இக்கருவி ஒரு நீளமான டிஸ்பிளே கொண்டிருப்பதையும் காட்டுகிறது. சந்தேகிக்கப்படும் இந்த சாதனம் இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டு வரும் என்றும் வெளியான வீடியோ கூறுகிறது.

"எதிர்கால ஆண்ட்ராய்டு"

மேலும் வீடியோவில் இருந்து, அல்ட்ரா பிக்ஸல் தொலைபேசியில் ஒரு புதிய வகை கைரேகை ரீடர் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது. அதாவது ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவின் கீழ் கைரேகை ரீடர் இடம்பெறலாம். கூடுதலாக, லீக் ஆன ஸ்லைடுகளில் "எதிர்கால ஆண்ட்ராய்டு இன்னும் திரவமானதாக இருக்கும்" என்ற வாசகத்தையும் காண முடிகிறது.

பல்பணி ஐகான்

பல்பணி ஐகான்

ஐபோன் எக்ஸ் போன்றே இந்த ஸ்மார்ட்போனின் உடலில் அல்லது திரையில் எந்த பொத்தானும் இடம்பெறவில்லை மற்றும் ஐபோன் எக்ஸ் போன்றே இக்கருவியை சைகைகள் வழியாக கட்டுப்படுத்த முடியும். ஸ்மார்ட்போன் திரையில் கீழே ஒரு பல்பணி ஐகான் காணப்படுகிறது, இது சைகைகளைப் பயன்படுத்தி அல்ட்ரா பிக்சலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்று பொருள்.

நேரடியாக போட்டி

நேரடியாக போட்டி

ஆக கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2, பிக்சல் 2 எக்ஸ்எல் மற்றும் அல்ட்ரா பிக்சல் ஆகிய சாதனங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் ஆகியவற்றுடன் நேரடியாக போட்டியிடலாம் என்பதை ஊகிக்க முடிகிறது. இருப்பினும், இந்த கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் இருப்பின் மீது எந்த உறுதிப்படுத்தலும் இல்லை, கடைசி நிமிடத்தில் நடக்கும் மாற்றங்களுக்கு கூட சாத்தியக்கூறுகள் உள்ளன.

இரட்டை முன்பக்கம் எதிர்கொள்ளும் ஸ்பீக்கர்கள்

இரட்டை முன்பக்கம் எதிர்கொள்ளும் ஸ்பீக்கர்கள்

அதாவது, அக்டோபர் 4 அன்று நடக்கும் நிகழ்வில் அல்ட்ரா பிக்சல் தொடங்கப்படாது மாறாக பிக்ஸல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்று ஊகிக்கப்படுகிறது. நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை பிக்சல் தொலைபேசிகளில் இரட்டை முன்பக்கம் எதிர்கொள்ளும் ஸ்பீக்கர்கள் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Mysterious Google "Ultra pixel" smartphone on tow to compete with iPhone X. Read more about this in Tamil GizBo
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்