எல்ஜி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன் உடன் டூயல் ஸ்கீரின் சாதனம் ஒன்றையும் வழங்கியுள்ளது.

|

பார்சிலோனாவில் நடந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்ஜி நிறுவனம் இரண்டு தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது, ஒன்று எல்ஜி வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் இரண்டாவது ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி8 தின்க்
ஸமார்ட்போன் ஆகும்.

எல்ஜி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் சிறந்த கேமரா அமைப்பு மற்றும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எல்ஜி வி50 தின்க் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 மற்றும் ஸ்னாப்டிராகன் எக்ஸ்50 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. பின்பு போனை அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேப்பர் சேம்பர் சார்ந்து இயங்கும் வெப்பத்தை குறைக்கும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் ஸ்கீரின் சாதனம்

டூயல் ஸ்கீரின் சாதனம்

எல்ஜி நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன் உடன் டூயல் ஸ்கீரின் சாதனம் ஒன்றையும் வழங்கியுள்ளது. இது ஸ்மார்ட்போனில் 6.2-இன்ச டிஸ்பிளேவை சேர்த்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது, மேலும் இது ஸ்மார்ட்போனுடன் போகோ பின் மூலம் இணைந்து கொள்கிறது.

மூன்று கேமரா

மூன்று கேமரா

எல்ஜி ஜி8 தின்க் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு ஹேண்ட் ஐ.டி. மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி கூட இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்ஜி வி50 தின்க் 5ஜி மற்றும் எல்ஜி ஜி8 தின்க் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எல்ஜி வி50 தின்க் 5ஜி:அம்சங்கள்

எல்ஜி வி50 தின்க் 5ஜி:அம்சங்கள்

டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல்விஷன் ஒஎல்இடி டிஸ்பிளே (3120x1440 பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம் சிப்செட் உடன்
அட்ரினோ 640 ஜிபியு
மோடெம்: ஸ்னாப்டிராகன் எக்ஸ்50 5ஜி மோடெம்
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
இயங்குளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரியர் கேமரா: 12எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி சூப்பர் வைடு கேமரா + 12எம்பி டெலிபோட்டோ கேமரா
செல்பீ கேமரா: 8எம்பி செல்பீ கேமரா + 5எம்பி இரண்டாவது கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
கைரேகை சென்சார்
5ஜி, 4ஜி, வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி 2.0
3.5எம்எம் ஆடியோ ஜாக்,DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ

எல்ஜி ஜி8 தின்க்:அம்சங்கள்

எல்ஜி ஜி8 தின்க்:அம்சங்கள்

டிஸ்பிளே: 6.1-இன்ச் ஃபுல் விஷன் ஒஎல்இடி டிஸ்பிளே (3120x1440 பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம் சிப்செட் உடன்
அட்ரினோ 640 ஜிபியு
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரியர் கேமரா: 12எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி சூப்பர் வைடு கேமரா + 12எம்பி டெலிபோட்டோ கேமரா
செல்பீ கேமரா: 8எம்பி
கைரேகை சென்சார், 3டி ஃபேஸ் அன்லாக்
பேட்டரி: 3500எம்ஏஎச் பேட்டரி
3.5எம்.எம் ஆடியோ ஜாக் 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் டிஏசி
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

நிறங்கள்

நிறங்கள்

மேலும் எல்ஜி வி50 தின்க் ஸ்மார்ட்போன் ஆஸ்டோ பிளாக் நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு அமெரிக்காதென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 5ஜி சேவையை வழங்க எல்ஜி பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன்இணைந்துள்ளது. அதேபோன்று எல்ஜி ஜி8 தின்க் ஸ்மார்ட்போன் கார்மைன் ரெட், நியூ அரோரா பிளாக் மற்றும் நியூ மொராக்கன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலைப் பற்றி அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
MWC 2019: LG unveils V50 ThinQ and G8 ThinQ with Snapdragon 855 SoCs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X