சியோமியை ஒரங்கட்டும் 5ஜி போல்டபுள் ஹுவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன்.! விலை & விற்பனை விபரம்.!
ஹுவாய் நிறுவனம் நேற்று ஹுவாய் மேட் எக்ஸ் 5ஜி போல்டபுள் ஸ்மார்ட்போன் மாடலை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.
ஹுவாய் நிறுவனம் நேற்று ஹுவாய் மேட் எக்ஸ் 5ஜி போல்டபுள் ஸ்மார்ட்போன் மாடலை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.
ஹுவாய் நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி போல்டு VS ஹுவாய் மேட் எக்ஸ்
சாம்சங் அண்மையில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி போல்டு ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக இந்த ஹுவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு களமிறக்கப்படும் என்று ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்று பக்க போல்டபுள் டிசைன்
மூன்று பக்க போல்டபுள் டிசைன் வடிவத்தில் இந்த மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி போல்டு போல் உள்பக்கமா மடியாமல் வெளிப்புறமாக மடிக்கும் படி ஹுவாய் மேட் எக்ஸ் 5ஜி போல்டபுள் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹுவாய் மேட் எக்ஸ் சிறப்பம்சங்கள்:
- 8' இன்ச் 2480 x 2200 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே
- ஹுவாய் மேட் எக்ஸ் போல்டு செய்யும் பொழுது, 6.6' இன்ச் 2480 x 1148 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட முன்பக்க டிஸ்பிளே
- 6.3' இன்ச் 2480 x 892 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட பின்பக்க டிஸ்பிளே
- பலோங் 5000 சிப் உடன் கூடிய கிரீன் 980 சிப்செட்
- 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி கொண்ட எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு பை 9.0 இயங்குதளம்
- 5ஜி ஸ்மார்ட்போன்
- 6.5 ஜிபி வரை டௌன்லோடிங் வேகம்
- 3.5 ஜிபி வரை அப்லோடிங் வேகம்
- 40 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கில் லென்ஸ் கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட டெலிபோட்டோ லென்ஸ் கேமரா உடன் கூடிய ட்ரிபிள் கேமரா சேவை
- 4500 எம்.ஏ.எச் பேட்டரி
- பாஸ்ட் சார்ஜிங்
- யு.எஸ்.பி டைப்-சி போர்ட்

ஹுவாய் மேட் எக்ஸ் நிறம்
ஹுவாய் மேட் எக்ஸ் போல்டபுள் ஸ்மார்ட்போன் இன்டெர்ஸ்டெல்லர் ப்ளூ நிறத்தில் வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை விபரம்
இந்த ஹுவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.2,09,400 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications