Home
Mobile

எம்டபுள்யூசி2018: எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 காம்பேக்ட் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி இவற்றில் உள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் மாடலை எம்டபுள்யூசி2018 -நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். தற்சமயம் பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறமுகம் செய்த வண்ணம் உள்ளது. மேலும் சாம்சங் நிறுவனம்
அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேல்கஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்இசெட்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஜபி 65/68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 4கே வீடியோ பதிவு வசதி, ஆண்டி-டிஸ்டார்ஷன் ஷட்டர், ட்ரிப்பில் இமேஜ் சென்சிங் தொழில்நுட்பம் போன்றவை இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.0-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160x1080 பிக்சல் தீர்மானம் மறறும் 18:9 என்ற திரைவிகிதம்
இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஷ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குவால்காம்:

குவால்காம்:

சோனி எக்ஸ்இசெட்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மெமரியை கூடுதலாக நீட்டிக்கும்
வசதி இவற்றில் உள்ளது. மேலும் பாலி கார்போனேட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கேமரா:

கேமரா:

சோனி எக்ஸ்இசெட்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் 19எம்பி ரியர் கேமரா, எக்ஸ்மோஸ் ஆர்எஸ் சென்சார், 1/2.3 சென்சார் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, ஸ்பீக்கர், மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம், கைரேகை சென்சார் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
2870எம்ஏஎச்:

2870எம்ஏஎச்:

சோனி எக்ஸ்இசெட்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போனில் 2870எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்
விலை பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை.

Best Mobiles in India

English summary
MWC 2018 Sony launches Xperia XZ2 Compact smartphones come with Snapdragon 845 SoC; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X