ட்ராக்கர் வசதியுடன் புதிய டியூவல் சிம் போன்: எம்விஎல் அறிமுகம்

புதிய புதிய தொழில் நுட்பங்களை கொடுத்து வாடிக்கையாளர்களை திருப்திபடுத்திக் கொண்டிருக்கின்ற எம்விஎல் நிறுவனம் அடுத்ததாக ஜி-99 போனை வெளியிட இருக்கிறது.
3.2 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட இந்த மொபைலில் டியூவல் சிம் பொருத்தும் வசதியும் கொண்டுள்ளது. 3.2 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதல் வீடியோவை ரெக்கார்ட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் துல்லியமான வசதியை ரெக்கார்டிங்கை பெற முடியும்.
வாடிக்கையாளரின் விருப்பத்திற்கினங்க பொழுது போக்கு அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
எம்விஎல் மொபைலில் ஆடியோ, வீடியோ ப்ளேயர் மற்றும் 3.5 ஆடியோ ஜேக் வசதியும் உள்ளது.
இசைப் பிரியர்களுக்கு ஏற்றவாறு எஃஎம் ரேடியோ வசதியும் உள்ளது. மொபைலைத் தற்செயலாகத் தவரவிட்டுவிட்டாலும் இதில் உள்ள மொபைல் ட்ரேக்கர் மூலம் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். இந்த போனில் உள்ள மெமரி வசதியினை 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.
தொழில் நுட்ப நிபுணர்கள் புளூடூத் வசதியினை கொடுத்திருப்பதால் சுலபமாக எந்தத் தகவல்களையும் பரிமாரிக் கொள்ள முடியும். நெட் வசதியினைப் பெருவதற்காக ஜிபிஆர்எஸ் மற்றும் டபில்யூஏப்பி வசதிகளும் உள்ளன. கணினியில் இருந்து எதையும் எளிய முறையில் பதிவேற்றம் செய்ய யூஎஸ்பி போர்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
டியூவல் சிம் வசதி கொண்ட இந்த எம்விஎல் ஜி99 மொபைல் மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications