Home
Mobile

மேக்ஸ் எம்எக்ஸ்-349 vs கார்பன் பூம்பாக்-2 போன்களின் ஒப்பீடு

By Super
மேக்ஸ் எம்எக்ஸ்-349 vs கார்பன் பூம்பாக்-2 போன்களின் ஒப்பீடு
நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கனவை நனவாக்கும் வகையில் மொபைல்போன்களை மேக்ஸ் மற்றும் கார்பன் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

குறைந்த விலை என்பதற்காக வசதிகள் மற்றும் தரத்தை குறைக்காமல், வாடிக்கையாளர் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வரும் மொபைல்போன்களுக்கு மார்க்கெட்டில் மத்தியில் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது.

குறிப்பாக, பொழுதுபோக்கு அம்சங்களில் குறைவைக்கக்கூடாது என்பதை கவனத்தில்கொண்டு மேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள எம்எக்ஸ் 349 மற்றும் கார்பனின் பூம்பாக்ஸ்-2 போன்களின் சிறப்பம்சங்களை காணலாம்.

இரண்டு போன்களும் டிஎப்டி திரையுடன், டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதி கொண்டுள்ளதாக இருக்கிறது. இரண்டும் குறைந்த எடை கொண்டதாக இருப்பதால், பாக்கெட்டில் வைத்து எடுக்க வசதியாக உள்ளது.

மேக்ஸ் எம்எக்ஸ் 349 மொபைல்போன் 64 எம்பி சேமிப்பு திறனையும், கார்பன் பூம்பாக்ஸ்-2 போன் 200 எம்பி சேமிப்பு திறனையும் கொண்டுள்ளது. இரண்டு போன்களிலும் 4 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறனுக்கான மெமரி கார்டை பொருத்திக்கொள்ளலாம்.

ஆடியோ அம்சத்தை பொறுத்தவரை மேக்ஸ் எம்எக்ஸ்-349 பாலிபோனிக் டோன் சப்போர்ட் கொண்டுள்ளது. எப்எம் ரேடியோ, எம்பி-3 பிளேயர், 3.5 மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் ஆகியவையும் உண்டு. கார்பன் பூம்பாக்ஸ்-2 போனில் எப்எம் ரேடியோ இருக்கிறது. ஆனால், ரெக்கார்டிங் செய்யும் வசதி இல்லை. 2.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் மற்றும் பாலிபோனிக் டோன் சப்போர்ட் செய்கிறது.

இரண்டு போன்களிலும் 2 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வீடியோ ரெக்கார்டிங் மற்றும் வீடியோ பிளேயர் வசதியும் உள்ளது. மேக்ஸ் எம்எக்ஸ் 349 போனில் டிஜிட்டல் ஜூம் வசதி இருக்கிறது.

மேக்ஸ் போனில் இன்பில்ட் வீடியோ கேம்ஸ் உள்ளது. ஆனால், ஜாவா அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யவில்லை. அதேநேரம், கார்பன் பூம்பாக்ஸ்-2 போன் ஜாவா அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்கிறது.

புளூடூத், யூஎஸ்பி, ஜிபிஆர்எஸ் ஆகிய கனெக்ட்டிவிட்டி வசதிகள் இரு போன்களிலும் உள்ளது. 3ஜி, எட்ஜ், வை-பை உள்ளிட்ட இணைப்புகளை இரு போன்களிலும் பெற இயலாது என்பது குறையாக தெரிகிறது.

மேக்ஸ் எம்எக்ஸ்- 349 ரூ.1,950 விலையிலும், கார்பன் பூம்பாக்ஸ்-2 போன் 2,600 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில், கார்பன் பூம்பாக்ஸ்-2 கூடுதல் சேமிப்பு திறன், வீடியோ கேம்ஸ் மற்றும் ஜாவா அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும வசதி உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X