டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கான பிரத்யேக கையுறை!

By Super
|

டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கான பிரத்யேக கையுறை!
தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில் விரல் கீறல்கள் விழாதவாறு பாதுகாப்பதற்காக, கையுறைகளை (கிளவுஸ்) முஜ்ஜோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

குளிர் காலத்தில் தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதற்கு இவை மிக ஏற்றதாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிலும் விலை உயர்ந்த ஐபோன் போன்ற மொபைல்களுக்கு இது மிக பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் சில ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து விரல்களில் அழுத்தி கொண்டே இருப்பதால் சிறிது காலம் கழித்து தொடுதிரையில் அப்ளிகேஷன்களை இயக்கும்போது அவற்றின் பதிலளிக்கும் தன்மையை இழந்து விடுகிறது.

இந்த தொந்தரவுகளை போக்க முஜ்ஜோ க்ளவுஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய க்ளவுஸ் ஐபோன் ஸ்மார்ட்போனுக்கு மட்டும் அல்ல, சாம்சங், எச்டிசி, பிளாக்பெர்ரி போன்ற அனைத்து நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் பயன்படுத்தலாம்.

இதனால் குளிர் காலத்தில் கூட கைகளை வெதுவெதுப்பான முறையில் வைத்து கொண்டு தொடுதிரை மொபைல்களை பயன்படுத்தலாம். இது தொடுதிரை வசதி கொண்ட மொபைல்களுக்காவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

சில்வர் கோட் கொண்ட நைலான் ஃபைபர், இந்த முஜ்ஜோ க்ளவுஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக க்ளவுஸ் படைக்கப்பட்ட இந்த முஜ்ஜோ க்ளவுஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த பயனை அளிக்கும். விருப்பமான நபர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு அளிக்க வேண்டும் என்றால் இந்த முஜ்ஜோ க்ளவுஸை கிரிஸ்மஸ் பரிசாக அளிக்கலாம்.

முஜ்ஜோ ஆன்லைன் ஸ்டோரில், இந்த கிளவுஸ் ரூ.1,720 விலையில் கிடைக்கும். மேலும், இது கைகளின் அளவுக்கு தக்கவாறு சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில் வாங்கிக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X