Home
Mobile

சாம்சங் கேலக்ஸி போனை ரூ.7,500க்கு வழங்கும் எம்டிஎஸ்

By Karthikeyan
சாம்சங் கேலக்ஸி போனை ரூ.7,500க்கு வழங்கும் எம்டிஎஸ்

இந்தியாவில் இயங்கி வரும் சிடிஎம்எ ஆபரேட்டரான எம்டிஎஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் 16 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறது. இந்த நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி ஒய் சிடிஎம்எ ஸ்மார்ட்போனை 1ஜிபி உயர் வேகம் கொண்ட 3 மாத அன்லிமிட்டட் டேட்டா யூசேஜுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.7,500க்கு வழங்க இருக்கிறது.

மேலும் 3 மாதங்களுக்கு எம்டிஎஸ்ஸிலிருந்து எம்டிஎஸ்ஸுக்கு அன் லிமிடட் லோக்கல் கால்களை செய்யும் வசதியையும் வழங்குகிறது. இந்த போன் எம்டிஎஸ்ஸின் சில்லறை வர்த்தக கடைகளிலும் மற்றும் இந்தியாவின் ஏனைய கடைகளிலும் கிடைக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு சாம்சங் தனது சிடிஎம்எ வெர்சனில் தொடக்க நிலை ஆன்ட்ராய்டு போனான சாம்சங் கேலக்ஸி ஒய்யை களமிறக்கி இருந்தது. இந்த கேலக்ஸி ஒய் சிடிஎம்ஒ போன் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது.

மேலும் 2எம்பி கேமராவையும், 3 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை மற்றும் 800 எம்ஹெர்ட்ஸ் ப்ராசஸரையும் கொண்டிருக்கிறது. அதோடு இந்த போனில் எப்எம் ரேடியோ, வைபை போன்ற வசதிகளும் உண்டு. மேலும் இந்த போன் இப்போது எம்டிஎஸ்ஸின் இவிடிஒ நெட்வொர்க்கையும் சப்போர்ட் செய்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X