Home
Mobile

எம்டிஎஸ் வழங்கும் எம்டேக்-351 ஸ்மார்ட்போன்!

By Super

எம்டிஎஸ் வழங்கும் எம்டேக்-351 ஸ்மார்ட்போன்!
எம்டிஎஸ் நிறுவனம் புதிதாக 3 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக தகவல்கள் வெளியானது. எம்டேக்-351, எம்டேக்-352 மற்றும் எம்டேக்-281 என்ற இந்த 3 ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்ய உள்ளது.

இதில் எம்டிஎஸ் எம்டேக்-351 ஸ்மார்ட்போன் வழங்கும் தொழில் நுட்ப வசதிகளை பற்றியும் பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் கெப்பாசிட்டிவ் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இதில் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.

இதில் உள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், இந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளம் சிறப்பாக இயங்க உதவும். ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் எம்டேக்-351 ஸ்மார்ட்போன் செயல்படும்.

இதனால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் என்னென்ன புதிய வசதிகளை பெற முடியுமோ அந்த வசதிகளை எம்டேக்-351 ஸ்மார்ட்போன் சிறப்பாக கொடுக்கும். அதோடு இதில் டியூவல் கேமரா வசதியினையும் பெறலாம்.

இதில் இருக்கும் 3.0 கேமரா அழகான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்கும். வீடியோ சாட்டிங் வசதிக்காக விஜிஏ முகப்பு கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு இயங்குதளம் இந்த ஸ்மார்ட்போனில் இருப்பதால், நிறைய அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் அப்படி நிறைய அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என்கிற போது, அதற்கு தகுந்த வகையில் பேட்டரியின் ஆற்றலும் முக்கியமாக உள்ளது.

சிறந்த ஆற்றலை வழங்க இதில் 1,300 எம்ஏஎச் பேட்டரியினையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். எம்டிஎஸ் எம்டேக்-351 ஸ்மார்ட்போன் ரூ. 7,499 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X