Home
Mobile

ரூ.4,000 விலையில் ஆன்ட்ராய்டு மொபைல்களை வழங்கும் எம்டிஎஸ்

By Super
ரூ.4,000 விலையில் ஆன்ட்ராய்டு மொபைல்களை வழங்கும் எம்டிஎஸ்
லைவ்வயர் மற்றும் எம்டேக் என்ற புதிய மொபைல்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது எம்டிஎஸ் நிறுவனம்.

சிடிஎம்ஏ சிம் கார்டு மொபைல்களை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது எம்டிஎஸ் தொலைதொடர்பு நிறுவனம்.

மேலும், பல்வேறு சலுகைகளுடன் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீப்பெய்டு திட்டத்தில் சிடிஎம்ஏ மொபைல்களை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

இதேபோன்று, புதிதாக அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் லைவ்வயர் மற்றும் எம்டேக் ஆகிய மொபைல்களும் கட்டண சலுகைகளுடன் விற்பனைக்கு கொண்டு வருகிறது எம்டிஎஸ்.

லைவ்வயர் மொபைல் பிரீப்பெய்டு திட்டத்தில் ரூ.54,999 விலையிலும் மற்றும் எம்டேக்-3 பிரீப்பெய்டு திட்டத்தில் ரூ.5,499 விலையிலும் கிடைக்கிறது.

அதே போல் லைவ்வயர் போஸ்ட்பெய்டு திட்டத்தில் ரூ.2,999 விலையிலும் மற்றும் எம்டேக்-3 மொபைல் ரூ.3,499 விலையிலும் கிடைக்கிறது.

இந்த மொபைல்களை போஸ்ட்பெய்டு திட்டத்தில் வாங்கினால், 250எம்பிக்கு தகவல் பரிமாற்றம் மற்றும் 250 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.

போஸ்ட்பெயிட் திட்டத்திற்கு மாதம் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த இரண்டு மொபைல்களில் எம்டிஎஸ் லைவ்வயர் ஆன்ட்ராய்டு மொபைல் 2.2 பிரையோ ப்ளாட்ஃபார்மில் இயங்குகிறது. இதில் 3.2 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவும் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

எம்டேக்-3 மொபைல் 2.8 இஞ்ச் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இந்த மொபைல் 3.2 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது. இதில் எம்டிஎஸ் டிவி ஆப்ளிகேஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த ஆன்ட்ராய்டு 2.2 பிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த மொபைல் ரூ.10,000 விலையில் தான் கிடைக்கிறது. ஆனால் அதே ஆன்ட்ராய்டு 2.2 பிரையோ ஆப்பரேட்டிங் வசதி கொண்ட லைவ்வயர் மொபைல் மிகவும் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X