புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை வழங்கும் எம்டிஎஸ்!

By Super
|

புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை வழங்கும் எம்டிஎஸ்!
எம்டிஎஸ் நிறுவனம் புதிதாக 3 ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. எம்டேக்-351, எம்டேக்-352 மற்றும் எம்டேக்-281 ஆகிய ஸ்மார்ட்போன்களை கூடிய விரைவில் களமிறக்க உள்ளது, சிஸ்டமா ஷியாம் டெலி சர்வீசஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் எம்டிஎஸ்.

இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்குவதாக இருக்கும். எம்டேக் 351 மற்றும் எம்டேக்-352 ஆகிய இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 3.5 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்டதாக இருக்கும். மீதம் உள்ள எம்டேக்-281 ஸ்மார்ட்போன் 2.8 இஞ்ச் தொடுதிரை வசதியினை வழங்கும்.

தொலை தொடர்பு சேவை நிறுவனமான எம்டிஎஸ் இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால், நிச்சயம் இதில் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எம்டேக்-351 ஸ்மார்ட்போன் 3.0 மெயின் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும்.

மற்ற 2 ஸ்மார்ட்போன்களும் மெயின் கேமராவினை மட்டும் வழங்கும். எம்டேக்-351 ஸ்மார்ட்போன் ரூ. 7,499 விலை கொண்டதாகவும், எம்டேக்-352 ஸ்மார்ட்போன் ரூ. 6,499 விலையிலும் மற்றும் எம்டேக்-281 ஸ்மார்ட்போன் ரூ. 5,499 விலையிலும் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X