Home
Mobile

மகிழ்ச்சியை இரடிப்பாக்கும் மோட்டோ இஎக்ஸ்-115 மொபைல்!

By Super

மகிழ்ச்சியை இரடிப்பாக்கும் மோட்டோ இஎக்ஸ்-115 மொபைல்!
குறைந்த விலையில் பிரம்மாண்டமான வடிவமைப்பு கொண்ட மொபைல் வேண்டும் என்று அனைத்து வாடிக்கையாளர்களும் எதிர் பார்க்கின்றனர். சிறப்பான மொபைல்களை வழங்கும் மோட்டோரோலா நிறுவனத்தின் இஎக்ஸ்-115 மொபைல் வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்.

இந்த இஎக்ஸ்-115 மொபைல் 2.3 இஞ்ச் திரையினை வழங்கும். இதனால் தகவல்களானாலும் சரி, புகைப்படமானாலும் சரி தெளிவாக பார்க்கலாம். கண்ணாடி போல் தெள்ளத் தெளிவான புகைப்படங்களை பெற இந்த 3.0 மெகா பிக்ஸல் கேமரா சிறப்பாக உதவும். இதில் உள்ள கேமராவினால் இனிய தருணங்களை எளிதில் பதிவு செய்து கொள்ளலாம்.

அதிகம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த மொபைலில் டியூவல் சிம் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஜி-மெயில், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற விஷயங்களில் உள்ள தகவல்களையும் பார்க்க இந்த மொபைல் பெரிதும் உதவுகிறது.

இந்த மொபைல் கியூவர்டி கீப்பேட் வசதி கொண்டு மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 930 எம்ஏஎச் பேட்டரி 3 மணி நேரம் டாக் டைம் மற்றும் 240 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் தரும்.

இதில் மெமரி வசதியை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். இஎக்ஸ்-115 மொபைலின் தோற்றத்தை பார்த்தால் அதிக விலை கொண்டதாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் இந்த மொபைலை ரூ.4,800 ஒட்டிய விலையில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X