200MP கேமரா.. சக்தி வாய்ந்த சிப்செட்.. மிரட்டும் Motorola X30 Pro.! விலை என்ன தெரியுமா?
மோட்டோரோலா நிறுவனம் வியாழக்கிழமை சீனாவில் புதிய மோட்டோரோலா எக்ஸ்30 ப்ரோ (Motorola X30 Pro) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 2 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், அறிமுகப்படுத்தப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

200 மெகாபிக்சல் கேமராவுடன் Motorola X30 Pro அறிமுகமா?
Motorola X30 Pro ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் முக்கியமான சிறப்பே இது 200 மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. Motorola X30 Pro ஸ்மார்ட்போன் முன்புறத்தில் பஞ்ச் ஹோல் கேமராவுடன் வளைந்த கர்வுடு பின்புற பேனல் வடிவமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

Motorola X30 Pro விலை என்ன?
மோட்டோரோலா எக்ஸ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை CNY 3,699 ஆகும். இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 43,600 இலிருந்து தொடங்குகிறது. அதேபோல், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை CNY 4,199 ஆக இருக்கிறது. இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 49,500 விலையில் வருகிறது. இதன் 12ஜிபி + 512ஜிபி ஸ்டோரேஜ் டாப்-எண்ட் மாடலின் விலை CNY 4,499 ஆகும். இது தோராயமாக ரூ. 53,000 விலையை நெருங்குகிறது.

மோட்டோரோலா X30 ப்ரோ சிறப்பம்சம்
இந்தியா போன்ற மற்ற ஸ்மார்ட்போன் சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது கிடைக்கும் என்பதை மோட்டோரோலா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இந்தியாவில் இது விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா X30 ப்ரோ டிவைஸ் 6.73' இன்ச் முழு HD+ pOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 144Hz ரெப்பிரஷ் ரேட் உடன் வருகிறது. இது இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் வருகிறது.

சக்தி வாய்ந்த லேட்டஸ்ட் Snapdragon சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனின் பேனல் அனைத்து பக்கங்களிலும் ஸ்லிம் பெசல்களால் சூழப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் இருபுறமும் வளைந்த விளிம்புகளைக் கொண்டுள்ளது மற்றும் முன்பக்கத்தின் நடுவே பஞ்ச் ஹோல் கேமரா உள்ளது. இது ஹூட்டின் கீழ், Moto X30 Pro மேம்பட்ட 4nm செயல்முறையின் அடிப்படையில் Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் வருகிறது.

ஸ்டோரேஜ் மற்றும் கேமரா அம்சம்
இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 512GB வரை UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 200 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது. மற்ற இரண்டு சென்சார்கள் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

Motorola X30 Pro போனில் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவா?
முன்பக்கத்தில், Motorola X30 Pro ஸ்மார்ட்போன் 60 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இந்த புதிய Motorola X30 Pro சாதனம் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் பேக் செய்கிறது. வெறும் 7 நிமிடங்களில் பேட்டரியை 50 சதவிகிதம் சார்ஜ் செய்கிறது. அதேபோல், 19 நிமிடங்களில் 100 சதவிகிதம் சார்ஜ் செய்துவிடலாம் என்றும் மோட்டோரோலா கூறுகிறது. Moto X30 Pro ஆனது 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சிறந்த கேமரா அம்சத்தை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த Motorola X30 Pro சரியான சாய்ஸ்.


Click it and Unblock the Notifications