Home
Mobile

Motorola முடிச்சு விட்ருச்சு.. பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி, 50MP கேமரா, IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் ஆனது "அதுக்குள்ள இன்னொரு 7000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்-ஆ" என்று ஆச்சரியப்படட வைக்கிறது. 7000mAh பேட்டரி கொண்ட மோட்டோ ஜி67 பவர் 5ஜி (Moto G67 Power 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்து சில நாட்களே ஆகிறது.

அதற்குள் இந்நிறுவனம் இன்னொரு 7000mAh பேட்டரி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அது மோட்டோரோலா ஜி76 5ஜி (Moto G76 5G) ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி100எஸ் (Moto G100s) ஸ்மார்ட்போனின் ரீ பிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Motorola முடிச்சு விட்ருச்சு.. பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி!

மோட்டோ ஜி100எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் உடனான 6.72-இன்ச் LCD டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட்
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 30W சார்ஜிங் ஆதரவு உடனான 7000mAh பேட்டரி

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா
- 32MP செல்பீ கேமரா
- நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான IP64 ரேட்டிங்
- என்எப்சி (NFC)
- டூயல் ஸ்பீக்கர்ஸ்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- இது ரூ.18,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹலோ யுஎக்ஸ் (1 மேஜர் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள்)
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 6.7-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் (1,080×2,400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே

- HDR10+ ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா 7ஐ ப்ரொடெக்ஷன்
- MIL-810H இராணுவ தர டிராப் ப்ரொடெக்ஷன்
- குவால்காமின் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட்
- 8ஜிபி ரேம் (இதை ரேம் பூஸ்ட் 4.0 வழியாக 24 ஜிபி வரை விரிவாக்க முடியும்)
- 256 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- கூகுளின் ஜெமினி ஏஐ வாய்ஸ் அசிஸ்டென்ட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- ஒரு "டூ-இன்-ஒன் ஃப்ளிக்கர்" கேமரா
- 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா

- 5ஜி ஆதரவு
- டூயல் பேண்ட் வைஃபை
- ப்ளூடூத் 5.1
- டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம்
- தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்
- 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி

மோட்டோ ஜி67 பவர் 5ஜிஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்: அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் ரூ. 15,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.1000 தள்ளுபடியை பெற்று ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Working on new 7000mAh Battery Phone Could be Moto G76 5G Rebranded of Moto G100s
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X