3 எட்ஜ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் களமிறக்கும் Motorola.! காத்திருப்போம்.!

|

மோட்டோரோலா நிறுவனம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் எட்ஜ் சீரிஸ் (Edge Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

 மோட்டோரோலா எட்ஜ் சீரிஸ்

மோட்டோரோலா எட்ஜ் சீரிஸ்

அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள மூன்று போன்களும் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 2022 போனும் அறிமுகம் செய்யப்படும் என்று
தகவல் வெளிவந்துள்ளது.

1 இல்ல மொத்தம் 7 இருக்கு: 2022 இல் Apple செய்ய இருக்கும் சம்பவம்- உங்க காட்டில் மழை தான்!1 இல்ல மொத்தம் 7 இருக்கு: 2022 இல் Apple செய்ய இருக்கும் சம்பவம்- உங்க காட்டில் மழை தான்!

மோட்டோரோலா எட்ஜ் 2022

மோட்டோரோலா எட்ஜ் 2022

அதாவது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் தான் இந்த மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் இப்போது மோட்டோரோலா எட்ஜ் 2022
ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

OnePlus Nord 3 விரைவில் இந்தியாவில் அறிமுகம்.! Nord ஸ்மார்ட் வாட்ச் கூட அறிமுகமா?OnePlus Nord 3 விரைவில் இந்தியாவில் அறிமுகம்.! Nord ஸ்மார்ட் வாட்ச் கூட அறிமுகமா?

புல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே

புல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே

மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080×2,400 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 பிளஸ் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன்.

Dimensity 1050 பிராசஸர்

Dimensity 1050 பிராசஸர்

புதிய மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 1050 பிராசஸர் உடன் 6என்எம் சிப் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா போன்.

பட்ஜெட் விலையில் டூயல் ரியர் கேமராவுடன் Vivo Y22s போன் அறிமுகம்.!பட்ஜெட் விலையில் டூயல் ரியர் கேமராவுடன் Vivo Y22s போன் அறிமுகம்.!

50எம்பி பிரைமரி சென்சார்

50எம்பி பிரைமரி சென்சார்

மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு அங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

Vodafone Idea சொன்ன டாப் 3 பிளான்கள்: கம்மி விலையில் அன்லிமிடெட் டேட்டா, அதிக வேலிடிட்டி!Vodafone Idea சொன்ன டாப் 3 பிளான்கள்: கம்மி விலையில் அன்லிமிடெட் டேட்டா, அதிக வேலிடிட்டி!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 2022 போன். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி இதில் உள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவை கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன். பின்பு இதை சார்ஜ் செய்ய 30W டர்போபவர் வயர்டுசார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3D சோனிக் மேக்ஸ், 200MP செல்பி கேமரா உடன் Samsung ஸ்மார்ட்போன்- இன்னும் இருக்கு பாஸ்!3D சோனிக் மேக்ஸ், 200MP செல்பி கேமரா உடன் Samsung ஸ்மார்ட்போன்- இன்னும் இருக்கு பாஸ்!

மோட்டோரோலா எட்ஜ் 2022 விலை?

மோட்டோரோலா எட்ஜ் 2022 விலை?

சிங்கிள் சிம் 5ஜி, புளூடூத் 5.2, என்எப்சி, வைஃபை 6 மற்றும் யூஎஸ்பி-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன்.

தற்போது அமெரிக்காவில் கருப்பு நிறத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 2022 போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் விலை $499.99(இந்திய மதிப்பில் ரூ.40,000) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola to launch three 3 Edge series smartphones in India on September 8: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X