Home
Mobile

Moto-வின் முரட்டு போன்.. 144Hz டிஸ்பிளே, IP68, 50MP சோனி கேமரா, 32MP செல்பீ கேமரா, 68W சார்ஜிங்.. என்ன விலை?

வருகிற மே 16 தேதியன்று, மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் சீரீஸின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அது என்னெண்ணன் அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) ஸ்மார்ட்போனை பற்றித்தான். எக்ஸ் தளம் (X Platform) வழியாக இது வருகிற மே 16 அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Moto-வின் முரட்டு போன்.. என்ன மாடல்? என்ன விலை?

என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஆனது, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகி விட்டது என்பதால் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்பதில் குழப்பம் இருக்காது. நினைவூட்டும் வண்ணம் இது மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) உடன் அறிமுகமானது.

முக்கிய அம்சங்களை மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ஆனது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144hHz Display) உடனான டிஸ்பிளே , ஐபி68 ரேட்டிங் (IP68 Rating), 50-எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 68W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) போன்றவைகளை கொண்டுள்ளது.

விரிவான அம்சங்களை பொறுத்தவரை, ஃபாரஸ்ட் ப்ளூ (Forest Blue), ஹாட் பிங்க் ( Hot Pink) மற்றும் மார்ஷ்மெல்லோ ப்ளூ (Marshmallow Blue) என்கிற 3 கலர் ஆப்ஷனக்ளில் வரும் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஆனது 12ஜிபி வரையிலான ஆன்போர்டு ரேம் (12GB RAM) உடன் வரும். மேலும் இது ஆண்ட்ராய்டு 14 (Android 14 OS) ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ (Hello UI) கொண்டு இயங்கும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை 1,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1600 nits of peak brightness) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass 5 protection) உடனான 6.7-இன்ச் கர்வ்டு பிஓஎல்இடி டிஸ்பிளேவை (Curved pOLED display) கொண்டுள்ளது. இதில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் (In-display fingerprint sensor) இருக்கும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

அதில் 50-மெகாபிக்சல் சோனி LYTIA 700C மெயின் சென்சார் மற்றும் 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு மேக்ரோ ஷூட்டர் இருக்கும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ சென்சார் இருக்கும். இதுதவிர்த்து மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஆனது இந்தியாவில் 15 5ஜி பேண்டுகள் (5G Bands) மற்றும் வைஃபை 6-ஐ (WiFI 6) ஆதரிக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக இது 68W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.

என்ன விலைக்கு வரும்? மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷனின் இந்திய விலையை மோட்டோரோலா இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த போன் ஐரோப்பாவில் இந்திய ரூபாய் தோராயமாக ரூ.35,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இதேபோன்ற விலையை நாம் இந்திய சந்தையிலும் எதிர்பார்க்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி, அறிமுகத்திற்கு பின்னர் இது பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும். அறிமுக சலுகைகள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola to Launch Its Edge 50 Fusion Smartphone in India on May 16 Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X