Home
Mobile

இன்டல் கூட்டணியில் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் மோட்டோரோலா

By Karthikeyan
இன்டல் கூட்டணியில் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் மோட்டோரோலா

இந்தியாவில் உள்ள தனது கிளைகளை மோட்டாரோலா மூட இருந்தாலும் அது புதிய மொபைல்களைத் தயாரிப்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இன்டல் நிறுவனத்தோடு கூட்டணி வைத்திருக்கும் மோட்டோரோலா இன்டலின் ஒத்துலைப்போடு ஒரு புதிய ஆன்ட்ராய்டு போனைக் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான முகாந்திரம் இப்போதே தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஏனெனில் வரும் செப்டம்பரில் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க மோட்டோரோலா மற்றும் இன்டல் ஆகியவை பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. இந்த சந்திப்பில் மோட்டோரோலா ஏதாவது ஒரு புதிய போன் அல்லது டேப்லெட்டைப் பற்றிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு லண்டனில் நடைபெற இருக்கிறது. ஆனாலும் இந்த நிகழ்வில் இடம் பெறவிருக்கும் அறிவிப்பு பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. ஏற்கனவே இன்டல் நிறுவனத்தின் கூட்டணியில் லாவா மற்றும் லெனோவா ஆகிய நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்தன.

அந்த வகையில் மோட்டோரோலாவும் தற்போது இன்டலின் கூட்டணியில் புதிய சாதனத்தை வெளியிடும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X