Home
Mobile

காத்திருப்பு ஓவர்.. இந்தியாவுக்கு வரும் புது மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா (motorola) நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக இன்று டீசரை வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த டீசரில் எந்த மாடல் அறிமுகமாகும் என குறிப்பிடவில்லை. அதாவது அந்த டீசர் வீடியோவில் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் தெரிகிறது. பின்பு பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் இந்த போனின் வலது பக்கத்தில் உள்ளன.

கடந்த மே மாதம் மோட்டோ ஜி86 5ஜி (Moto G86 5G)ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த போன் தான் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சரி இப்போது கடந்த மே மாதம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி86 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

காத்திருப்பு ஓவர்.. இந்தியாவுக்கு வரும் புது மோட்டோரோலா 5ஜி போன்..

மோட்டோ ஜி86 5ஜி அம்சங்கள் (Moto G86 5G specifications) : பான்டோன் காஸ்மிக் ஸ்கை (PANTONE Cosmic Sky), பான்டோன் கோல்டன் சைப்ரஸ் (Pantone Golden Cypress), பான்டோன் ஸ்பெல்பவுண்ட் (Pantone Spellbound) நிறங்களில் இந்த மோட்டோ போன் வெளியானது.

குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10 பிட் கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2712×1220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (In-display Fingerprint Sensor) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4NM (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உடன் மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

மோட்டோ ஜி86 5ஜி போன் 50எம்பி Sony LYT-600 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atoms), டூயல் மைக்ரோபோன்கள்(dual microphones) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த புதிய மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது.

அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)ஆதரவும் இந்த போனில் உள்ளது.

இந்த மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போன் 5200mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி என்எப்சி, ப்ளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த இந்த மோட்டோ போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola teases new smartphone launch in India: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X