Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. சோனி கேமரா.. pOLED டிஸ்பிளே.. வருகிறது புது Motorola போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது தற்போது டீசர் மூலம் இந்த புதிய போனின் வருகையை உறுதிப்படுத்தியுள்ளது. அதுவும் இந்த புதிய போன் மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி (Motorola Edge 60 5G) ஸ்மார்ட்போனாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ், மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன், மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இந்தியாவில் வெளியாகி உள்ளது. எனவே மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போன் தான் அடுத்து இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது வெளியிடப்பட்ட டீசரில் 50x க்கு மேல் ஜூம் செய்யும் வசதி, டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவை புதிய எட்ஜ் போனில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போன் தான் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புது Motorola போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி அம்சங்கள் (Motorola Edge 60 5G specifications) : 6.7-இன்ச் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே(quad-curved pOLED Display) டிஸ்பிளே வசதியுடன் புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 10-பிட் கலர்ஸ், எச்டிஆர் 10 பிளஸ் சப்போர்ட், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i), எச்டிஆர் 10 பிளஸ் சப்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் வசதி உடன் புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபொல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

OIS ஆதரவு கொண்ட் 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display optical fingerprint sensor) மற்றும் IP69 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுகளுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவரும். மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

5200mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன. மேலும் புளூடூத் வி5.4, வைஃபை 6, டூயல் சிம் 5ஜி, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய மோட்டோரோலா போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Motorola teases new Edge smartphone in India, Edge 60 expected: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X