விரைவில் மோட்டோரோலாவின் புதிய 4ஜி ஸ்மார்ட்போன்!

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் மோட்டோரோலா நிறுவனம் தனது அடுத்த புதிய ஸ்மார்ட்போனை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த இந்த புதிய டேப்லெட்டின் படங்களை மோட்டோரோலா, பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறது. அதோடு தங்களது அடுத்த 4ஜி ஸ்மார்ட்போனைப் பற்றிய தகவல்களையும் வெளியிட்டிருக்கிறது.
லெட்ஸ் ப்ளே எ கேம். கெஸ் த ஸ்மார்ட்போன் என்ற வாசகங்களோடு இந்த புதிய ஸ்மார்ட்போனைப் பற்றிய தகவல்களை பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய போனின் பெயர் வெள்ளிக் கிழமையாகிய இன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது. எனினும் இந்த புதிய போனின் பெயர் மோட்டோரோலா ட்ராய்ட் ரேசர் எச்டி என்று இருக்கும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.
ஏனெனில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இந்த போனைப் பற்றி ஏராளமான வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இதன் 13எம்பி பின்பக்க கேமரா எச்டி வீடியோ வசதியைக் கொண்டது.
அதோடு நவீன ஆன்ட்ராய்டு 4.0.4 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் வேரிசான் வயர்லெஸ் இணைப்பு உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் ப்ரவுசிங்கை மிக வேகமாகச் செய்ய முடியும். இதில் 4ஜி வசதி உள்ளதால் இதில் ஏராளமான தொழில் நுட்ப வசதிகள் இருக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications