Home
Mobile

யார் சாமி இவன்.. தீப்பிடிச்சு எரிஞ்சுதுனு வீடியோ போட்ட கஸ்டமர்.. உடனே உள்ள இறங்கி Motorola கண்டுபிடிச்ச உண்மை!

இந்த சம்பவம் குறித்த மோட்டோரோலாவின் சமீபத்திய விளக்கம்: மோட்டோரோலா நிறுவனம் இந்த வழக்கை விசாரித்ததில், தீப்பிடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக கூறும் வாடிக்கையாளர் கூற்றை ஆதரிக்க அவரால் எந்த விவரங்களையும் வழங்க முடியவில்லை என்பது கதறியப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அவரின் கூற்றை ஆதரிக்க முடியாததால், டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தான் பதிவிட்ட, குறிப்பிட்ட வீடியோவை உள்ளடக்கி எக்ஸ் (X) தள பதிவை நீக்கியுள்ளார்.

மேலும் மோட்டோரோலா சேவை குழு ஆனது குறிப்பிட்ட வாடிக்கையாளரை தொடர்பு கொண்ட போது, அவர் தனது 3 இல் 2 ஸ்மார்ட்போன்கள் முன்பே வெடித்துவிட்டதாகவும், இவை செக்கென்டஹேண்ட் பர்சேஸ்கள் என்பதால் டிவைஸ்களுக்கான விலைப்பட்டியல்கள் (இன்வாய்ஸ்கள்) எதுவும் இல்லை என்றும் கூறி உளளார்.

தீப்பிடிச்ச போன்.. உடனே உள்ள இறங்கி Motorola கண்டுபிடிச்ச உண்மை!

மேலும் மோட்டோரோலா நிறுவனத்தின் சிவம் ரஞ்சன், இந்த விஷயத்தில் நேரடியாக ஈடுபட்டு உள்ளதாகவும், இந்த விஷயத்தில் மோட்டோரோலா நிறுவனம் சட்ட நடவடிக்கைகளையும் ஆராய்ந்து வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது - நேற்று நாங்கள் பதிவு செய்த கீழ் உள்ள கட்டுரைக்கு, இன்று (ஜனவரி 1, 2026) மோட்டோரோலா நிறுவனம் அளித்துள்ள விளக்கம் ஆகும்.

சோஷியல் மீடியாக்களில் பரவி வரும் ஒரு வீடியோவின் படி, ஒரு மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஆனது ஒரு நபரின் பாக்கெட்டில் இருந்தபோது தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த ஒரு வீடியோ கிளிப்பை, கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி அன்று பிரபல டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் பகிர்ந்து கொண்டார்

குறிப்பிட்ட டிப்ஸ்டர் இந்த வீடியோவை shubhxr_369 என்கிற இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இருந்து ரீபோஸ்ட் செய்துள்ளார். வெளியான வீடியோ வழியாக அது ஒரு மோட்டோரோலா ஜி-சீரிஸ் ஸ்மார்ட்போன் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அது மோட்டோ ஜி54 மாடல் ஆக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

வெளியான வீடியோவில் குறிப்பிட்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளதை பார்க்க முடிகிறது. மேலும் பேக் பேனலில் உள்ள பிளாஸ்டிக் உருகியதாக தெரிகிறது. கூடவே முன்பக்கத்தில் ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் விரிசல் அடைந்து, பிளாக்கென்ட் ஆகிவிட்டதையும் பார்க்க முடிகிறது

குறிப்பிட்ட வீடியோவில், தீப்பிடித்த மோட்டோரோலா ஸ்மாட்போனிற்கு சொந்தக்காரர் தனது ஜீன்ஸில் தீயால் ஏற்பட்டஒரு பெரிய துளையையும் காட்டுகிறார். மேலும் தனது ஸ்மார்ட்போன் ஆனது தீப்பிடித்த நேரத்தில் பயன்பாட்டில் இல்லை என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் லித்தியம்-அயன் பேட்டரியின் பாதுகாப்பு குறித்து கவலைகளை மீண்டும் ஒருமுறை எழுப்பியுள்ளது. நவீனகால ஸ்மார்ட்போன் பேட்டரிகள் ஆனது இதுபோன்ற வெடிப்புகளை சந்திக்காமல் இருப்பதற்காக அல்லது இதுபோன்ற வெடிக்கும் அபாயத்தை குறைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட சாஃப்ட் பவுச் செல்களை பயன்படுத்தினாலும், அவைகள் பிஸிக்கல் டேமேஜிற்கு ஆளாகின்றன.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதிக வெப்பநிலை காரணமாக தீப்பிடிப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும், குறிப்பிட்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போன் தீப்பிடிப்பு சம்பவத்திற்கான சரியான காரணம் இப்போதைக்கு வெளியாகவில்லை. அதை அறிந்துக்கொள்ள உற்பத்தியாளரால் நடத்தப்படும் முறையான விசாரணை தேவை. இந்த வழக்கு குறித்து மோட்டோரோலா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கிஸ்மோசீனா அறிக்கை குறிப்பிடுகிறது.

மோட்டோரோலா போன்கள் ஆனது இதே போன்ற சம்பவங்களில் சிக்கியது கடந்த காலத்திலும் பதிவாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 2025 இல், பிரேசிலில் ஒரு பெண் ஷாப்பிங் செய்யும் போது தனது பின் பாக்கெட்டில் இருந்த மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் தீப்பிடித்ததால் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளானார்.

ஆனால் இதுபோன்ற வழக்குகள் அரிதானவை என்றும் பெரும்பாலும் குறைபாடுகள் அல்லது சேதத்துடன் தொடர்புடையவை என்றும் மோட்டோரோலா பின்னர் விளக்கம் அளித்து இருந்தது. இதேபோல மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதிக வெப்பமடைந்து பாக்கெட்டில் இருக்கும் போது தீப்பிடித்த சம்பவத்தை கடந்த 2024 இல் வெளியான ரெடிட் பதிவு வழியாக அறிந்துகொள்ள முடிந்தது. இதுபோன்ற சம்பவங்கள் அசாதாரணமாகவே இருக்கின்றன, ஆனால் ஆன்லைனில் பகிரப்படும் வீடியோக்கள் விரைவாக கவனத்தை ஈர்க்கின்றன

மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரி கெப்பாசிட்டி: இது ஒரு பெரிய 6000mAh பேட்டரியுடன் வருகிறது. இது 33W டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 66 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 90 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.5-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப்செட் உடன் வருகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் குவாட் பிக்சல் (Quad Pixel) தொழில்நுட்பம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Smartphone Catches Fire in Owner Pocket Raised concerns around mobile battery safety
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X