Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே இதுக்கு மிரளுது.. 90W சார்ஜிங்.. 50MP SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் அல்ட்ரா பிரீமியம் டிசைன் மற்றும் பீச்சர்களை கொண்ட மோட்டோரோலா சிக்னேச்சர் (Motorola Signature) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி உறுதியாகி உள்ளது. எக்ஸ்ட்ரீம் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி சோனி சென்சார் கேமரா, 90W பாஸ்ட் சார்ஜிங், 5200mAh பேட்டரி கிடைக்க உள்ளது. இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

குளோபல் மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் வருகிற ஜனவரி 23ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பான்டோன் கார்பன் (PANTONE Carbon) மற்றும் பான்டோன் மார்டின் ஆலிவ் (PANTONE Martini Olive) கலர் மற்றும் டிசைன் உறுதியாகி உள்ளது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே இதுக்கு மிரளுது.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

மேலும், சோனி லைடியா 828 (Sony LYTIA 828) சென்சார் மற்றும் டால்பி விஷன் ரெக்கார்டிங் கொண்ட கேமரா கிடைக்க உள்ளது. போஸ் நிறுவனத்தின் ஆடியோ டியூனிங்குடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. பேபரிக் பினிஷன் பாடி மற்றும் விவிட் டிஸ்பிளே கிடைக்க உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குளோபல் வெர்ஷனை போலவே இருக்கிறது.

மோட்டோரோலா சிக்னேச்சர் அம்சங்கள் (Motorola Signature Specifications): 6.8 இன்ச் (2780 x 1264 பிக்சல்கள்) எக்ஸ்ட்ரீம் அமோலெட் (Extreme AMOLED) டிஸ்பிளேவை இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், சூப்பர் எச்டி (Super HD) ரெசொலூஷன், 165 Hz ரெஃப்ரெஷ் ரேட், 360 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 6200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது.

டால்பி விஷன் (Dolby Vision), 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர்10பிளஸ் (HDR10+), வாட்டர் டச் (Water Touch) மற்றும் பான்டோன் ஸ்கின்டோன் (Pantone SkinTone) கொண்டுள்ளது. ஆண்டாராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது. 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் கொண்டுள்ளது. 90W டர்போ வயர்டு சார்ஜிங் மற்றும் 50W டர்போ வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரி கிடைத்துள்ளது. மேலும், 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைத்துள்ளது. IP69 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட அண்டர்வாட்டர் புரொடெக்சன் உள்ளது.

மேலும், MIL-STD 810H10 சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. சோனி லைட்டியா 828 (Sony LYTIA 828) சென்சார், குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) மற்றும் லைட் சென்சார் இதில் கிடைக்கிறது. மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உள்ளது.

3X ஆப்டிகல் ஜூமிங், 100X சூப்பர் ஜூமிங் ப்ரோ கிடைக்கிறது. 8K டால்பி விஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது. அடாப்டிவ் ஸ்டெபிலைசேஷன், ஆட்டோ போகஸ் டிராக்கிங், ஓஐஎஸ், ஆட்டோ நைட் விஷன் உள்ளிட்ட பிரீமியம் கேமரா பீச்சர்கள் உள்ளன. மேலும், ஆட்டோ நைட் மோஷன் (Auto Motion Capture), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) கிடைக்கிறது.

டால்பி விஷன் (Dolby Vision), டூயல் கேப்ச்சர் வீடியோ (Dual Capture Video), பேஸ் ரீடச் (Face Retouch), கெஸ்ச்சர் கேப்ச்சர் (Gesture Capture) கிடைத்துள்ளது. குளோபல் மார்கெட்டில் ரூ.1,05,087 விலை இருக்கிறது. இந்தியாவில் சற்று குறைவான பட்ஜெட்டில் கிடைக்கலாம். இருப்பினும், அதிக விலை கொண்ட மோட்டோரோலா மாடலாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Signature With Snapdragon 8 Gen 5 Chipset 5200mAh Battery Launching in India on January 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X