தூள் கிளப்பிய Motorola.. சோனி கேமரா.. 7 வருட OS அப்டேட்.. அறிமுகமானது புதிய போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா சிக்னேச்சர் (Motorola Signature) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய மோட்டோரோலா சிக்னேச்சர் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா சிக்னேச்சர் அம்சங்கள் (Motorola Signature specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா சிக்னேச்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 6200 நிட்ஸ் பிரைட்னஸ், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Gorilla Glass Victus 2 Protection) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) உடன் இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் காப்பர் மெஸ் லிக்விட் மெட்டல் கூலிங் சிஸ்டம் (Copper mesh liquid metal cooling system) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 50எம்பி சோனி எல்ஒய்டி-828 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி சோனி எல்ஒய்டி-600 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக 8கே டால்பி விஷன் மற்றும் 4கே டால்பி விஷன் வீடியோ பதிவு ஆதரவு கொண்டுள்ளது இந்த போனின் கேமராக்கள்.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
12ஜிபி வரை மற்றும் 512ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ, ஸ்னாப்டிராகன் சவுண்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5200mAh பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா சிக்னேச்சர் போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். பான்டோன் கார்பன் மற்றும் பான்டோன் மார்டினி ஆலிவ் நிறங்களில் வாங்க முடியும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா சிக்னேச்சர் விலை EUR 899.99 (இந்திய மதிப்பில் ரூ.89,999)-ஆக உள்ளது.ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியங்களில் இந்த போன் முதலில் விற்பனைக்கு வரும். மேலும் இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








