நாளை இந்தியாவில் லான்ச் ஆகும் புது Motorola 5ஜி போன்.. 7 வருட OS அப்டேட்.. சோனி கேமரா.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் இந்த 2026-ம் ஆண்டு தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது மோட்டோரோலா சிக்னேச்சர் (Motorola Signature) எனும் ஸ்மார்ட்போனை நாளை (ஜனவரி 7) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். இப்போது இந்த போனின முழு விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா சிக்னேச்சர் அம்சங்கள் (Motorola Signature specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எக்ஸ்ஸ்ட்ரீம் அமோலெட் (Extreme AMOLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 6200 நிட்ஸ் பிரைட்னஸ், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Gorilla Glass Victus 2 Protection) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) உடன் இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி சோனி எல்ஒய்டி-828 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி சோனி எல்ஒய்டி-600 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக 8கே டால்பி விஷன் மற்றும் 4கே டால்பி விஷன் வீடியோ பதிவு ஆதரவு கொண்டுள்ளது இந்த போனின் கேமராக்கள்.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவரும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker) உள்ளிட்ட வசதிகளுடன் இந்த போன் வெளியாகும்.
5200mAh பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா சிக்னேச்சர் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் இந்த போனில் உள்ளன. அதேபோல் 5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 6.0, யுஎஸ்எபி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் மோட்டோரோலா சிக்னேச்சர் வெளிவரும். மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








