Home
Mobile

மிரட்டலடி.. பென்சில் சப்போர்ட் உடன் புது Motorola போன்.. 5ஜி, 16GB ரேம், பெரிய 6.7-இன்ச் OLED டிஸ்பிளே!

ஸ்டைலஸ் ஆதரவு (Stylus Support) உடன் ஒரு புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அது மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் (Motorola Signature smartphone) ஆகும். சுவாரசியமாக இது வெறுமனே ஸ்டைலஸ் ஆதரவை மட்டுமே முன்னிலைப்படுத்து போல் தெரியவில்லை.

ஒய்டெக்பி (YTechB) வழியாக மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டிங் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. அதன் வழியாக இந்த ஸ்மார்ட்போன் மார்டினி ஆலிவ் பினிஷ் உடன் காட்சியளிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் - மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்வரோவ்ஸ்கி எடிஷன், ஒரு ஸ்டைலஸ், ஒரு ஸ்மார்ட்வாட்ச், மோட்டோ டேக் மற்றும் ஒரு ஸ்பீக்கருடன் வைக்கப்பட்டுள்ளது.

மிரட்டலடி.. பென்சில் சப்போர்ட் உடன் புது Motorola போன்!

குறிப்பிட்ட மார்க்கெட்டிங் புகைப்படங் ஆனது இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலஸ் இன்புட்டை ஆதரிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. கூடவே இது சதுர வடிவிலான ரியர் கேமரா ஐலேண்ட் உடன் வருவதையும், அதில் எல்இடி ஃபிளாஷ் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்த புதிய லீக் ஆனது, டிப்ஸ்டர் இவான் பிளாஸ் (@evleaks) கடந்த மாதம் பகிர்ந்த முந்தைய ரெண்டருடன் ஒத்துப்போகிறது. ஆரம்பத்தில் இது மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா (Motorola Edge 70 Ultra) என்கிற மாடல் பெயரின் கீழ வெளியிடப்படும் என்று நம்பப்பட்டது. ஆனால் இப்போது, மோட்டோரோலா சிக்னேச்சர் என்கிற பெயரின் கீழ் ஜனவரி 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போனில் உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்களை பொறுத்தவரை, இந்த போனின் வருகையை டீஸ் செய்யும் மைக்ரோசைட் தற்போது பிளிப்கார்ட்டில் நேரலையில் உள்ளது. அதன் மூலம் இது ஹோல் பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ரியர் கேமரா மற்றும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஷார்ட்கட் கீயுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட், அட்ரினோ 829 ஜிபியு மற்றும் 16 ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.7-இன்ச் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போன் 50 மெகாபிக்சல் சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ (Moto X70 Air Pro) மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சரியான வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளது.

டிஇஎன்ஏஏ (TENAA) சான்றிதழ் விவரங்களின்படி, மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1264 x 2780 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் உடனான ஒரு பெரிய 6.78-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் சிப்பால் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது, இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 ஆக இருக்கலாம்.

கேமராக்கள் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக தெரிகிறது. மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் அதன் முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேக் பேனலில் இது மூன்று 50-மெகாபிக்சல் சென்சார்களை கொண்ட ட்ரிபிள் கேமரா செட்டப் உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் ஒன்று 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

பேட்டரியை பொறுத்தவரை மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் ஸ்லிம் ஆன டிசைனை தக்கவைத்து கொள்வதற்காக 5100mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக இது 3சி சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது, அப்போது இது 90W சார்ஜருடன் வரும் என்கிற தகவல் கிடைத்தது. இது வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிப்பதாகவும் வதந்தி பரவியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Signature Smartphone Reportedly Comes With Stylus Support India Launch on January 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X