மொத்த மார்கெட் காலி.. QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. SONY கேமரா.. 90W சார்ஜிங்.. 5200mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த மோட்டோரோலா பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ள மோட்டோரோலா சிக்னேச்சர் (Motorola Signature) ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் கசிந்துள்ளன. குளோபல் மார்கெட்டைவிட கம்மியாக இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போனின் விலை, பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஜனவரி 23 ஆம் தேதி மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதால், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, சோனி லைட்டியா கேமரா, ஏர்கிராப்ட் அலுமினியம் ஃபிரேம், 6.99 எம்எம் அல்ட்ரா ஸ்லிம் மற்றும் 186 கிராம் எடை போன்ற விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த பீச்சர்கள் அப்படியே குளோபல் வேரியண்ட்டை போலவே இருப்பது தெரிகிறது. ஆகவே, ஒட்டுமொத்த பீச்சர்களும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், குளோபல் மார்கெட் விலைக்கும் இந்திய மார்கெட் விலைக்கும் வித்தியாசம் இருக்கும். இதனால், எந்த விலைக்கு எதிர்பார்க்கலாம் என்பதை சொல்ல முடியாமல் இருந்து வந்தது. இப்போது மார்கெட்டில் கசிந்துவிட்டது.
ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்களுடன் விலை விவரங்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரி, எக்ஸ் தளத்தில் விலை விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இதில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.64,999ஆகவும் இருக்கிறது.
மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.69,999ஆக இருக்கப் போகிறது. ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மேலும், ரூ.7,500 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்பட உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. குளோபல் மார்கெட்டின் விலையைவிட இது குறைவாக இருக்கிறது.
அதாவது, குளோபல் மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.82,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆனால், இந்திய மார்கெட்டில் குறைவான விலைக்கு கிடைக்க உள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்க வேண்டும். இப்போது, மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோரோலா சிக்னேச்சர் அம்சங்கள் (Motorola Signature Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Octa Core Snapdragon 8 Gen 5) சிப்செட்டை இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் கொண்டுள்ளது. மேலும், ஆண்டாராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுத்துள்ளது. இதில் 7 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும். 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகிறது.
சோனி லைட்டியா 828 சென்சாருடன் 50 எம்பி பிரைமரி கேமரா கிடைக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் சோனி லைட்டியா 600 சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொடுத்துள்ளது. 3X ஆப்டிகல் ஜூமிங் கொடுக்கப்பட்டு உள்ளது.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதில் சோனி லைட்டியா 500 சென்சார் மற்றும் ஆட்டோ போகஸ் சப்போர்ட் கிடைக்கிறது. 6.8 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. 90W சார்ஜிங், 5200mAh பேட்டரி உள்ளது. பேண்டோன் கார்பன், பேண்டோன் மார்டினி ஆலிவ் ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications








