ஜன.23 வரை எந்த போனும் வாங்காதீங்க.. இந்தியாவுக்கு வருகிறது புதிய Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா சிக்னேச்சர் (Motorola Signature) ஸ்மார்ட்போன் கடந்த வாரம் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜனவரி 23-ம் தேதி அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இணையதளம் வழியாக விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா சிக்னேச்சர் அம்சங்கள் (Motorola Signature specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) உடன் இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் காப்பர் மெஸ் லிக்விட் மெட்டல் கூலிங் சிஸ்டம் (Copper mesh liquid metal cooling system) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா சிக்னேச்சர். மேலும் இதன் டிஸ்பிளேவில் 6200 நிட்ஸ் பிரைட்னஸ், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Gorilla Glass Victus 2 Protection) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
50எம்பி சோனி எல்ஒய்டி-828 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி சோனி எல்ஒய்டி-600 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக 8கே டால்பி விஷன் மற்றும் 4கே டால்பி விஷன் வீடியோ பதிவு ஆதரவு கொண்டுள்ளது இந்த போனின் கேமராக்கள்.
அதுவும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் 12ஜிபி வரை மற்றும் 512ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ, ஸ்னாப்டிராகன் சவுண்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5200mAh பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா சிக்னேச்சர் போன் வெளிவரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். பான்டோன் கார்பன் மற்றும் பான்டோன் மார்டினி ஆலிவ் நிறங்களில் வாங்க முடியும்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.89,999 பட்ஜெட்டில் இந்த புதிய மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய மோட்டோரோலா போன்.


Click it and Unblock the Notifications








