ஆரம்பமே ஆஃபர்.. இன்று விற்பனைக்கு வரும் புதிய Motorola 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா நிறுவனம் கடந்த வாரம் இந்தியாவில் மோட்டோரோலா சிக்னேச்சர் (Motorola Signature) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதுவும் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா சிக்னேச்சர் அம்சங்கள் (Motorola Signature specifications): மோட்டோரோலா சிக்னேச்சர் போன் 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 6200 நிட்ஸ் பிரைட்னஸ், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Gorilla Glass Victus 2 Protection) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) உடன் இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் காப்பர் மெஸ் லிக்விட் மெட்டல் கூலிங் சிஸ்டம் (Copper mesh liquid metal cooling system) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி இந்த போனில் உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி எல்ஒய்டி-828 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி சோனி எல்ஒய்டி-600 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக 8கே டால்பி விஷன் மற்றும் 4கே டால்பி விஷன் வீடியோ பதிவு ஆதரவு கொண்டுள்ளது இந்த போனின் கேமராக்கள்.
அதுவும் 16ஜிபி வரை மற்றும் 1டிபி மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 5200mAh பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா சிக்னேச்சர் போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளன. இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி, கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. பான்டோன் கார்பன் மற்றும் பான்டோன் மார்டினி ஆலிவ் நிறங்களில் வாங்க இந்த போனை வாங்க முடியும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ, ஸ்னாப்டிராகன் சவுண்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மோட்டோரோலா சிக்னேச்சர் விலை
- 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா சிக்னேச்சர் மாடலின் விலை ரூ.59,999-ஆக உள்ளது.
- 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா சிக்னேச்சர் மாடலின் விலை ரூ.64,999-ஆக உள்ளது.
- 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட மோட்டோரோலா சிக்னேச்சர் மாடலின் விலை ரூ.69,999-ஆக உள்ளது.
மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.5000 தள்ளுபடியும் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








