Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 200MP கேமரா.. 100X ஜூம்.. SONY சென்சார்.. புது Motorola போன்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யத்தையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த மோட்டோரோலா சிக்னேச்சர் 27 (Motorola Signature 27) ஸ்மார்ட்போனின் கேமரா, சிப்செட் மற்றும் டிசைன் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. இந்திய மார்கெட்டிலும் நேரடியாக வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

நவம்பர் 5ஆம் தேதி மோட்டோரோலா சிக்னேச்சர் 27 வெளியாக இருக்கிறது. இந்திய மார்கெட்டிலும் வெளியாக இருப்பதால், மோட்டோரோலா தளத்தில் முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்க குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 (Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6) சிப்செட் கொடுக்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 200MP கேமரா.. 100X ஜூம்.. மாடல்?

மோட்டோ ஏஐ பீச்சர்கள் மற்றும் எலைட் லெவல் கேமரா சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. புதிய 3டி வேப்பர் சேம்பர் (3D Vapor Chamber) கொண்டுள்ளது. சோனி எல்ஒய்டி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த டெலிபோட்டோவில் 100எக்ஸ் சூப்பர் ஜூமிங் கொடுக்கப்படுகிறது.

டிசைனை பொறுத்தவரையில், ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம் (Aerospace-grade Aluminum) மற்றும் கிளாஸ் செராமிக் (Glass Ceramic) பில்ட் கிடைக்கிறது. பேங் & ஓலுஃப்சன் அக்கூஸ்டிக் (Bang & Olufsen Acoustic) ஆடியோ கொண்ட மாடலாக இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் 27 வெளியாக இருக்கிறது. ஆகவே, மியூசிக், கேமிங், மூவிக்களில் நேச்சுரல் சவுண்ட் அவுட்புட் கிடைக்கும்.

பான்டோன் கூல் ஸ்மோக் (Pantone Cool Smoke) மற்றும் பான்டோன் கேபூலெட் ஆலிவ் (Pantone Capulet Olive) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. ஆனால், ஏற்கனவே இந்திய மார்கெட்டில் முழு பீச்சர்களும் கசிந்துவிட்டன. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோரோலா சிக்னேச்சர் 27 அம்சங்கள் (Motorola Signature 27 Specifications): 6.8 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டால்பி விஷன் கொடுக்கப்பட உள்ளது. 12000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்க இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டில் வெளியாக இருக்கிறது.

50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் மேக்ரோ ஆப்ஷன் கொடுக்கப்பட உள்ளது. ஆக்சன் சென்டாருடன் மோஷன் ஷாட்களை எடுக்கலாம். மோட்டோ ஏஐ பீச்சர்களை எளிதாக அணுக பிரத்யேக ஏஐ கீ (AI Key) கொடுக்கப்பட உள்ளது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொண்ட மாடலாக இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் 27 கிடைக்க இருக்கிறது.

7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. இந்திய மார்கெட்டில் முன்னதாக வெளியான மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.69,999 ஆக இருந்தது. ஆகவே, இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் 27 ஸ்மார்ட்போனின் விலை ரூ.89,999 முதல் ரூ.1 லட்சம் வரையில் இருக்க வாய்ப்புள்ளது. பிரீமியம் செக்மெண்ட்டில் இருப்பதால், எதிர்பார்ப்பும் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Motorola Signature 27 With Snapdragon 8 Elite Extreme Gen 6 Chipset Revealed Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X