Home
Mobile

நவம்பர் 5 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 200எம்பி கேமரா.. வருகிறது புது Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா சிக்னேச்சர் 27 (motorola signature 27) ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 5-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தரமான கேமரா வசதி மற்றும் சக்திவாய்ந்த சிப்செட் வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் அறிமுகமாகும். இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோரோலா சிக்னேச்சர் 27 போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோரோலா சிக்னேச்சர் 27 அம்சங்கள் (motorola signature 27 Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 சிப்செட் (Snapdragon 8 Elite Extreme Gen 6 chipset) உடன் புதிய மோட்டோரோலா சிக்னேச்சர் 27 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

நவம்பர் 5.. வருகிறது புது Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

6.8-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா சிக்னேச்சர் 27 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு 17 (Android 17) இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா சிக்னேச்சர் 27 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

50எம்பி Sony Lytia 910 மெயின் கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா ஆகியவை இந்த போனின் பின்புறம் உள்ளன. மீதமுள்ள கேமரா அமைப்பைப் பற்றி மோட்டோரோலா இன்னும் விரிவாகக் கூறவில்லை என்றாலும், இந்த ஃபோனின் கேமரா மாட்யூலில் பல சென்சார்கள் இருப்பதாகத் தெரிகிறது. எனவே புகைப்படம் எடுப்பதைப் பொறுத்தவரை, நாம் சில சிறப்பான விஷயங்களை இதில் எதிர்பார்க்கலாம்.

IP68 மற்றும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் மோட்டோரோலா சிக்னேச்சர் 27 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் உள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா சிக்னேச்சர் 27 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

நவம்பர் 5.. வருகிறது புது Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் புதிய மோட்டோரோலா சிக்னேச்சர் 27 ஸ்மார்ட்போன் வெளிவரும். 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய மோட்டோரோலா போனில் உள்ளன. பான்டோன் கோல் ஸ்மோக் மற்றும் பான்டோன் கேப்லெட் ஆலிவ் ஆகிய நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

அனைத்து சிறப்பான அம்சங்களுடன் மோட்டோரோலா சிக்னேச்சர் 27 சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய மோட்டோரோலா போன்.

Best Mobiles in India

English summary
motorola signature 27 Launch on November 5: Key Specifications Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X