Home
Mobile

ஆன்ட்ராய்டு அப்லோடுடன் வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்

By Super
ஆன்ட்ராய்டு அப்லோடுடன் வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா ஏட்ரிக்ஸ்-2 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன களமிறக்க உள்ளது மோட்டோரோலா நிறுவனம். ஆன்ட்ராய்டு வி2.3.5 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக வருகிறது இந்த புதிய போன். இதில் அனைத்து வசதிகளும் உயர்ந்த தொழில் நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த போனில் டியூவல் கோர் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட் ஓஎம்ஏபி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் அல்லது 1.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கும்.

தற்போது வரவிருக்கும் மோட்டோரோலா ஏட்ரிக்ஸ்-2 1 ஜிகாஹெர்ட்ஸ் என்விஐடிஐஏ டெக்ரா 2 சிபியு வசதி கொண்டது. ஏட்ரிக்ஸ்-2 மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 8 மெகா பிக்ஸல் திறன் கொண்ட முதன்மை கேமரா மூலம் துல்லியமான, தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.

இதில் 1080பி துல்லியத்தில் வீடியோ ரிக்கார்டிங் செய்யலாம் என்பது கூடுதல் விசேஷம். இது லெட் ப்ளாஷ் மற்றும் சூம் ஆப்டிக்கல் வசதியும் கொண்டது. இதில் நிச்சயம் இன்னொரு கேமரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எத்தனை மெகா பிக்ஸல் என்ற விபரம் பற்றிய தகவல் இல்லை. ஆனால், அது 2 மெகா பிக்ஸல் கேமரா இருக்கும் என்று தெரிகிறது.

ஏட்ரிக்ஸ்-2 மாடலில் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3.5 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமல்லாது இதில் கூகுள் அப்பிளிகேஷன்கள் மற்றும் வீடியோவுடன் கூகுள் டாக் செய்யும் வசதியும் பெற்றிருக்கிறது.

மேலும், இந்த போனில் புதிதாக வர இருக்கும் புதிய ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்துகொள்ள முடியும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுகுறித்த தகவல்கள் இதுவரை இல்லை.

இது அற்புதமான கெப்பாசிட்டிவ் டிஸ்ப்ளே, டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. 4.5 இஞ்ச் திரை மற்றும் 960 X 540 பிக்ஸல் ரிசல்யூஷன் கொண்டது.

இந்த ஏட்ரிக்ஸ்-2 மாடல் லேப்டாப் டாக்கிங் வசதி கொண்டதாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், மானிட்டர், டிவி, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் போன்றவற்றுடன் இணைக்க முடியும். இந்த மோட்டோரோலா ஏட்ரிக்ஸ்-2 மொபைலின் விலை விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X